Show all

இயற்கையே எதிர்த்து நிற்கும் நடுவண் பாஜக அரசின் குடியரிமைத் திருத்தச்சட்டம்! முன்னெடுக்க இயலா வண்ணம் கொரோனா மூலம் தடை

இயற்கை சில அறிவுறுத்தல்களை செய்கின்றது என்றால் மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு எதிராக முன்னெடுக்கிற சில தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காகவே. 

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயற்கை சில அறிவுறுத்தல்களை செய்கின்றது என்றால் மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு எதிராக முன்னெடுக்கிற சில தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காகவே. 

கொரோனாவை பொறுத்தவரை 1. சொந்த நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களைப்; பாதுகாப்பு செய். 2. உணவே மருந்து மருந்தே உணவு என்பதிலிருந்து விலகி கண்டதையெல்லாம் உண்ணாதே. 3. மக்களின் உடலுக்குள்ளாகவே தூண்டப்படும் எதிர்பாற்றலை வளர்க்க இயற்கையைப் பேணுக. 4. நடுவண் பாஜக அரசு முன்னெடுத்திருக்கிற மனிதநேயமற்ற மதவாத குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறு என்பதான செய்திகளை தெரிவிப்பதாக இருக்கிறது.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியக் குடியுரிமை பெற மதத்தை ஒரு காரணியாக்கிய குடியுரிமை திருத்த சட்டம் 24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (10.12.2019) அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இனி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மத சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.

மத அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு உள்ளான என்று தெரிவிக்கப்பட்டு- பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. 

இந்திய அரசின் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைக்கு ஆளாகாதவாறு, அவர்களுக்கு இந்த சட்டம் பாதுகாப்பு வழங்கும் என்று தெரிவிக்கிறது. ஆனால் தற்போதைய கொரோனா தாக்கத்தின் அடிப்படையில் இந்த சட்ட அடிப்படையைக் காட்டி யாரும் இந்தியாவில் நுழைந்துவிட முடியாது. அப்படி நுழைய அனுமதித்தால் இந்தியா பெரிய அளவில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகும் அபயாம் சூழ்ந்துள்ளது. 

ஆக இயற்கையே நடுவண் பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை, அந்த அரசே முன்னெடுக்கப்பட முடியாதபடி கொரோன தாக்குதல் மூலம் கையைக் கட்டியுள்ளது. 

இதே சமயம் சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்னும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களைக் கெரோனா தாக்கத்தைக் காட்டி போராட்டத்தை நிறுத்திக் கொள்ளும்படி, நடிகரும் அரசியல் தலைவருமான கமல் வலியுறுத்தியிருக்கிறார். 

நடுவண் பாஜகஅரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி எந்த அயல்நாட்டினரையும் இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாதபடி இயற்கையே கொரோனா மூலம் மாபெரும் தடையை முன்னெடுக்க வைத்திருக்கிறது. இந்த அபாய நிலையிலாவது நடுவண் பாஜக அரசு தனது ஹிந்துத்துவா வெறித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்பது நடுநிலை நாடும் சமூக செயல்பாட்டாளர்கள் ஆர்வமாக இருக்கிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.