Show all

வண்ணாரப்பேட்டை போராட்டம் நிறுத்தம்! மக்களை பாதித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக

வண்ணாரப்பேட்டை குடியுரிமைத் திருத்தச்சட்ட எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம். எதிர்காலத்தில் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வண்ணாரப்பேட்டை குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை எதிர்காலத்தில் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த முப்பத்தி மூன்று நாட்களாக இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் என அதிகளவில் மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், போரறிமுகர்கள் இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்தப் போராட்டத்தின் போது தங்களின் கோரிக்கையை ஒவ்வொரு நாளும் வேறுபட்ட முறையில் அரசிற்கு தெரிவிக்கும் விதமாக பலூன் விடுவது, ஒரு விரல் புரட்சி என்று எழுதி எதிர்ப்பு தெரிவிப்பது, புறாக்கள் மூலம் தூது விடுவது என தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் உலகமெங்கும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக  ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் சார்பாக கூட்டம் கூட வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து 33 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக போராட்ட குழு தலைவர் லத்திப் அறிவித்தார் மேலும் இறுதியில் நாட்டுப்பண் பாடி முடிந்தவுடன் அனைவரும் கலைந்து சென்றனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.