21,சித்திரை (மே4) திங்கட் கிழமை தமிழகத்திற்கு நல்லபொழுதாக விடிய வேண்டும் என்பதற்காக, கத்திரிவெயில் தொடங்கும் நாளில் கொரோனாவை பொசுக்கிட ஊரடங்கை முடித்துக் கொள்ள தமிழக அரசு அணியமாவதாக சொல்லப்படுகிறது. ஓர் அமெரிக்க ஆய்வும், நம்பழந்தமிழ் மரபும் அதற்கு கட்டியம் கூறுவதாகவே அமைகிறது. 12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கு முடிகிற அடுத்தநாள் கத்திரிவெயில் தொடங்குகிறது. இந்த நிலையில் நமக்கு ஆறுதலாக வெளியாகியுள்ள செய்தி:- கொள்ளை நோயாக உருவெடுத்துள்ள கொரோனா நுண்ணுயிரி, கதிரவன் ஒளி, அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம் ஆகிய சூழல்களில் வேகமாக செயலிழக்கும் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் இயல்அறிவு மற்றும் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசகரான பில் பிரையன், வெள்ளை மாளிகையில் இது குறித்த தகவலை வெளியிட்டார். கதிரவன் ஒளியால் வெளிப்படும் புற ஊதா கதிர்கள், கொரோனா நுண்ணுயிரியை அழிப்பதில் பங்கு வகிப்பதாகவும் அதனால் வெயில் காலத்தில் கொரோனாத் தொற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு பொருளின் மீதோ அல்லது காற்றிலோ இருக்கும் கொரோனா நுண்ணுயிரியை கதிரவன் வெளிச்சம் அழிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு இடத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்தாலோ அல்லது ஈரப்பதம் குறைந்தாலோ அது நுண்ணுயிரி பரவலுக்குச் சாதகமான சூழலாக இருக்கவில்லை, என்று விளக்கினார் வில்லியம். அதே நேரத்தில், வெயில் காலம் வரவுள்ளதால் அது கிருமியை முற்றிலும் அழித்துவிடும் என்ற முடிவுக்கு வரக் கூடாது. இந்த ஆய்வு முடிவில்கூட, நுண்ணுயிரி கதிரவன் வெளிச்சத்தினால் மட்டும் முற்றிலும் அழிந்துவிடும் என்று சொல்லப்படவில்லை. எனவே, தொடர்ந்து சமூக விலகலையும் கட்டுப்பாடுகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும், என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கு முன்னர் கொரோனா நுண்ணுயிரி குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளும் அது மிகவும் குளிரான சூழலில் வேகமாக வளர்ந்ததையும் மிகவும் வெப்பமான சூழலில் அந்தளவுக்கு வளர முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டின. இதற்கு எடுத்துக்காட்டாக, மிகவும் வெப்பமான தட்பவெப்ப சூழலைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் 7,000 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் 77 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தனர். பிரையனின் இந்த விளக்கத்திற்குப் பிறகு, இது தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தோலின் வழியாகவோ அல்லது வேறு வழியிலோ உடலில் வெளிச்சத்தை கொண்டு செல்ல முடியுமா என்பதை ஆராய வேண்டும் என்று டிரம்ப் பிரையனிடம் சொன்னார். ஆனால், உடலின் எந்தப் பகுதியையும் நுண்ணுயிரி நீக்கம் செய்ய புற ஊதா கதிர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்துள்ள உலக நலங்கு நிறுவனம் அது தோலில் எரிச்சலை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. சரியாகக் கையாளாவிட்டால் புறா ஊதாக் கதிர்கள் மூலம் மனிதர்களுக்கு ஆபத்து விளையக்கூடும் என்று வல்லுநர்கள் பலகாலமாக எச்சரித்து வருகின்றனர். சித்த மருத்துவத்தின் அடிப்படையாக திருக்குறள் தெரிவிக்கிற செய்தி கொண்டு, கொரோனா பரவலை உணவு மூலமாக நாம் கட்டுப்படுத்த முடியும் என்றே உறுதியாக நம்ப முடிகிறது. காற்று (வாதம்), தீ (பித்தம்), நீர் (கபம்) ஆகிய மூன்றும் கூடுதல், குறைதல் என்று இரண்டு வகைகளில் பெருக்கி வர அடிப்படையான நோய்கள் ஆறு வகையாகும். இந்த ஆறுவகை நோய்களையும் ஆறுவகையான சுவைகளில் அடக்குவதுதாம் சித்த மருத்துவம் ஆகும். ஒரு பொருளின் மீதோ அல்லது காற்றிலோ இருக்கும் கொரோனா நுண்ணுயிரியை கதிரவன் வெளிச்சம் அழிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தோலின் வழியாகவோ அல்லது வேறு வழியிலோ உடலில் வெளிச்சத்தை கொண்டு செல்ல முடியுமா என்பதை ஆராய வேண்டும் என்று டிரம்ப் பிரையனிடம் சொன்னார். நமக்கும் அதே ஆர்வம் தான். சித்த மருத்துவர்களே! இந்திய ஆயுஷ் நிறுவனத்தின் அறிஞர் பெருமக்களே! சித்த மருத்துவத்தால் கொரோனாவிற்கு தீர்வு இருக்கிறது என்று எங்களால், எங்கள் அனுபவங்கள் மூலம் உறுதியாக நம்ப முடிகிறது. கொரோனா என்பது உடலின் நீர்ம மிகுதியால் எளிதாக பரவுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது. அதை அடக்கும் மருந்தை உங்களால் உறுதியாக கொணர முடியும். எதைத் தின்றால் பித்தம் தெளியும்? ஒருவேளை வாதக் குடைசலாய் இருக்குமோ? நெஞ்சில் கபம் கட்டியிருக்கு. என்கிற உரையாடல்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இந்த மூன்றும் மிக முதன்மையானவை. வாதம், பித்தம், கபம் என்றும் அல்லது வளி, அழல், ஐயம்’ என்றும் சொல்லப்படுகிற மூன்றும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முத்தாது என்று தமிழ்ச் சித்த மருத்துவத்தில் கொண்டாடப்படும். மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும். கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும். தவிர்க்கவேண்டிய, சாப்பிடவேண்டிய உணவுகள்:- புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும். மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும். பித்தம் அதிகரித்தால், செரிமானக்;கோளாறு முதல் மனஅழுத்தம் வரை பல சிக்கல்களைக் கொண்டு வரக்கூடும். குடல்புண், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முதன்மைக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது. அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது. ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது கட்டாயம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, தற்போதைய கொரோனா இப்படி கபத்தால் வரும் நோய்கள் பல. பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம். மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும். அலுவலகத்திலிருந்து தும்;மிக் கொண்டே வரும் வாழ்க்கைத்துணைவருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது. வாதம், பித்தம், கபம் - இந்த மூன்று சொற்கள் மந்திரக் கூட்டணியைக் காப்பதில், சமையல்கூடத்துக்கு பங்கு உண்டு. நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம். அது, நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை இன்று சந்தையைக் குறிவைத்து 2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம், என திட்டமிடும்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
பொருள்: ஒருவருடைய உணவிலும் மற்றும் செயல்களிலும் அளவுக்கு மேல் காற்று, நீர், தீ கூடினாலும், குறைந்தாலும், அதுவே நோயாகும் என்பதாகும்.
வளிமுதலா எண்ணிய மூன்று
என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார்.
வாதம், பித்தம், கபம்:-
வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.
வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு கட்;;டாயம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று பொருள். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்.
மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது
முட்டாள்தனம்.
கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து
பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



