21,சித்திரை (மே4) திங்கட் கிழமை தமிழகத்திற்கு நல்லபொழுதாக விடிய வேண்டும் என்பதற்காக, கத்திரிவெயில் தொடங்கும் நாளில் கொரோனாவை பொசுக்கிட ஊரடங்கை முடித்துக் கொள்ள தமிழக அரசு அணியமாவதாக சொல்லப்படுகிறது. 11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் திடீரென்று கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று சென்னையில் அண்ணாசாலை மொத்தமாக மூடப்பட்டது. இதையடுத்து தற்போது சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய முதன்மையான மூன்று மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று மாவட்டங்களிலும் ஞாயிற்றுக் கிழமை முதல் புதன் கிழமை வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுமென அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை முதல் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு மிக கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது போக சேலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் எதுவும் செயல்பாடது. மக்கள் வெளியே வர கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சேலம் முழுக்க அனைத்து கடைகளும் இந்த நாட்களில் மொத்தமாக மூடப்படும். யாரும் வெளியே பொருட்கள் வாங்க வர முடியாது. சென்னையில் பொருட்களை வீட்டில் வழங்கிட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாறாக மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட இந்த நாட்களில் வெளியே வர முடியாது. பெரு நகரங்களில் இப்படி திடீர் என்று கட்டுப்பாடுகள் அதிகரிக்க காரணம்:- 21,சித்திரை (மே4) திங்கட் கிழமை தமிழகத்திற்கு நல்லபொழுதாக விடிய வேண்டும் என்பதற்காக, கத்திரிவெயில் தொடங்கும் நாளில் கொரோனாவை பொசுக்கிட ஊரடங்கை முடித்துக் கொள்ள தமிழக அரசு அணியமாவதாக சொல்லப்படுகிறது. சென்னை, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை ஆகியவை தமிழகத்தில் மிகவும் முதன்மையான மாவட்டங்களாகும். தமிழகத்தின் பொருளாதாரத்தில் இந்த மாவட்டங்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. இந்த மாவட்டங்களை நீண்ட நாட்களுக்கு மூடி வைக்க முடியாது. இந்த மாவட்டங்களில் மே 3க்கு மேலும் ஊரடங்கை பிறப்பிக்க முடியாது. அப்படி செய்தால் தமிழகத்தின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கும். இதனால் இங்கு உடனடியாக கொரோனாவை கட்டுபடுத்த வேண்டும். மே 3க்கு முன் இங்கு கொரோனா பரவுவதை மொத்தமாக கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி உடனடியாக இங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். மே 3க்குள் எவ்வளவு இறுக்கிப்பிடித்து கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடியுமோ அவ்வளவு இறுக்கமாக செயல்பாட வேண்டும். இதனால்தான் இந்த மாவட்டங்களில் வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளன. மே 3க்கு பிறகு ஊரடங்கை நீக்க வேண்டும் என்பதற்காக இப்போதே அங்கு முடிந்த அளவு கட்டுப்பாடுகளை விதித்து தீவிரம் காட்டுகிறார்கள். மேலும் இனி வரும் நாட்களில் இந்த மாவட்டங்களில் மட்டும் அதிகமாக கொரோனா சோதனைகள் செய்யப்படும். இந்த மாவட்டங்களில் மட்டும் தீவிரமாக கொரோனா பணிகள் சில நாட்களுக்கு கூடுதலாக நடக்கும் என்று கூறுகிறார்கள். தமிழகத்தின் மிக முதன்மையான பகுதிகள் என்று கருதப்படும் மாவட்டங்கள் இப்படி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது கொஞ்சம் ஆபத்தானது. வளர்ந்த மாவட்டங்கள் இப்படி கொரோனாஆட்சிமைப் பகுதிகளாக மாறுவது பெரிய சிக்கலை உண்டாக்கும். இதை தடுக்கும் வகையில் மொத்தமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களே இங்கே வெளியே வருவது தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



