Show all

ஏமாளி வாடிக்கையாளர்களுக்கு 2ரூபாய்க்கு 28நாளைக்கு 3ஜிபி தருகிறதாம் தரவு! அலம்பல் ஏர்டெல், தில்லாலங்கடி ஹாட்ஸ்டார் சேர்ந்து

நம்மை ஏமாளியாவே நினைத்துக் கொண்டு, அலம்பல் ஏர்டெல், தில்லாலங்கடி ஹாட்ஸ்டார் சேர்ந்து 2ரூபாய்க்கு 28நாளைக்கு 3ஜிபி தருகிறோம் தரவு என்று வேறு (வணிகச்) சொற்களில் பேசுவதை, ஏமாற்றத்தை எப்போதும் இயல்பாக எடுத்துக் கொள்கிற நாம் இப்படி புரிந்து கொள்ளலாம்.

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: பாரதி ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய தரவுச்சிப்பத் திட்டத்தை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தரவுச்சிப்பம் விலை ரூ401. 

இந்தச் சிப்பத்திற்கு உங்களுக்கு ஏர்டெல் தருவது- இந்த திட்டத்துடன் பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி திட்டமாம். அநதத் திட்டத்தின் உறுப்பினருக்கான ஓராண்டு கட்டணத்தை உங்களிடம் இருந்து வாங்கிய 401ல் 399ஐ செலுத்தி அங்கிருந்து 30- 40 விழுக்காடு தரகை ஏர்டெல் பெற்றுக் கொண்டுவிடும்.  இதற்கு ஏர்டெல் கொடுத்திருக்கும் தலைப்பு: “டிஸ்னி பிளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி திட்டம்” கூடுதல் கட்டணம் எதுவுமின்றி ஏர்டெல் இலவசமாக வழங்குகிறது என்பதாகும். 

புதிதாக ஏர்டெல் தரும் இந்த ரூ.401 திட்டம் முழுக்க முழுக்க வெறுமமேனே 28 நாட்களுக்கு கூடுதல் தரவு மட்டும் தருகிற திட்டம். இந்தத்திட்டத்தில் மட்டும் இணைந்து கொண்டுவிட்டு, உங்கள் செல்பேசியை முழுமையாகப் பயன்படுத்தி விட முடியாது. பேசுவதற்கும் சேதி அனுப்புவதற்கும் வேறு திட்டத்திலும் இணைந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 84நாட்களுக்கு சேவை தருகிற ரூ598 திட்டத்தில் பெரும்பாலானவர்கள் இணைந்திருக்கிறார்கள். பலர் அந்த திட்டத்தில் தருகிற அன்றாட ஒன்னரை ஜிபி தரவையே முழுமையாகப் பயன்படுத்த மாட்டார்கள். இவர்களுக்கு 401ல் 399 போக மீதி 2ரூபாயில் ஏர்டெல் அன்றாடம் 3ஜிபி தரவு தருமாம். 

ஆக இந்த புதிய தரவுச்சிப்பம் விலை ரூ401. திட்டத்தில் சேரும் போது நமக்கு கிடைப்பது “டிஸ்னி பிளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி திட்டம்” அந்த திட்டத்தை நமக்கு வாங்க வேண்டிய தேவையிருந்தால், அதை நேரடியாக அந்த நிறுவனத்தில் வாங்கினால், நாம் 399 செலவிட வேண்டும். நாம்; பயன்படுத்திக் கொண்டிருக்கிற தொலைதொடர்பு நிறுவனம் ஏர்டெல் என்றால், அதற்கு ஒரு இரண்டு ரூபாய் தருவதில் நாம் ஒன்றும் குறைந்து விட மாட்டோம். ஆனால் நமது பயன்பாட்டில் இருக்கிற ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் வாங்கும் போது ஏர்டெல் நிறுவனம், அந்த நிறுவனத்திற்கு நம்மை இணைத்துக் கொடுத்த வகைக்கு, ஒரு நல்ல கழிவுத்தொகையை சம்பாதித்துக் கொள்ளப் போகிறது. நட்பியலாக ஏர்டெல் மூலம் அந்தத் திட்டத்தில் இணைந்து ஏர்டெல்லுக்கு ஒத்துழைப்பதில் என்ன பிழை நேரப்போகிறது. ஒத்துழைப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.