இலங்கையில் கொரோனா நோயாளிகள் ஐவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை அந்த தொகையானது 10ஆக அதிகரித்துள்ளது என நலங்குத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது. 02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் கொரோனா நோயாளிகள் ஐவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை அந்த தொகையானது 10ஆக அதிகரித்துள்ளது என நலங்குத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 9 இலங்கையர்களும், 1 சீன குடிமகனும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சீன குடிமகன் குணமடைந்து சீனா நோக்கி பயணித்துள்ளார். பாதிக்கப்பட்ட 9 இலங்கையர்களும் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 103 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய மறை மாவட்டங்களிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு நேற்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கைதியொருவரை பார்வையிட மூன்று பேருக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் ஒருவர் மாத்திரமே கைதியொருவரை சென்று பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. மக்கள் ஒன்று திரளும் வகையிலான பொது கூட்டங்களை நடத்த எதிர்வரும் இரண்டு கிழமைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நலங்குத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.
தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம், வன பாதுகாப்பு உயிரியல் திணைக்களம் ஆகியவற்றிற்கு கீழுள்ள மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் இரண்டு கிழமைகளுக்கு மூடப்படுகின்றன. இலங்கையிலுள்ள திரையரங்குகள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



