Show all

ஆதாயமா, விரயமா! இந்தியா மேற்கொள்ளும் பெட்ரோல் இறக்குமதி மற்றும் வணிகம்

அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை 17.79 ரூபாய் மட்டுமே. இந்தத் தொகைதான் பெட்ரோல் உற்பத்தி நாடுகளுக்குப் போகிறது. அந்தத் தொகையில்தாம், அந்த நாடுகள் தம் மக்களுக்கு சொத்துவரி, வருமானவரி ஆகிய வரிகள் இல்லாமல் மக்களைச் செல்வச் செழிப்போடு வைத்திருக்கிறது. அந்த நாடுகளுக்கு வேலைவாய்ப்பு நாடிச் செல்லும் அயலவர்களுக்கும் சம்பளமாக வாரிவாரி வழங்குகிறது.

இந்த மாதத்தின் முதல் நாள் நிலவரப்படி, கச்சா எண்ணெய்யின் விலை ஒரு லிட்டர்- ரூ.17.79. நுழைவுக் கட்டணம், சுத்திகரிப்பு, தரையிறக்கும் செலவு ரூ.13.91. நடுவண் அரசின் கலால் வரி மற்றும் சாலை வரி ரூ.19.98. பெட்ரோல் வணிக நிறுவனங்களுக்கான கழிவு ரூ.3.55. மதிப்புக் கூட்டு வரி ரூ.14.91. இறுதி செய்யப்பட்ட 1 லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ.70.14. 

இவ்வாறு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அடக்கவிலை ரூ.17.79 மட்டும். அந்த பெட்ரோலை சந்தைப்படுத்தும் வகைக்கான செலவுகள் ரூ17.46 மட்டும். மீதமுள்ள 37.89 ரூபாய் நடுவண் அரசுக்கு செலுத்தப்படும் வரிகள்.

பெட்ரோல் உற்பத்தியில் அனைத்துச் செலவுகள் உட்பட ரூ.17.79 வாங்கும் அரபு நாடுகள் வளமையில். அனைத்துச் செலவுகள் உட்பட ரூ.17.46 பெறும் பெட்ரோலை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வளமையில். ஆனால் மீதமுள்ள 37.89 ரூபாய் பெற்றிடும் நமது நடுவண் அரசு மட்டும் தட்டுப்பாட்டில் என்றால் அந்தத் தொகை எப்படி வீணடிக்கப் படுகிறது என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.