சீனப் பொருட்கள் அதிகமாக அமெரிக்காவில் விற்பனையானால் அது அமெரிக்காவின் வீழ்ச்சி. அமெரிக்க பொருட்கள் அதிகமாக சீனாவில் விற்பனையானால் அது சீனாவின் வீழ்ச்சி. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது எந்த நாட்டிற்கும் நல்லது. அதற்கான பேரங்களில்தான் அமெரிக்காவும் சீனாவும் ஈடுபட்டிருக்கின்றன. இதை பரபரப்பாக்கி செய்தியில் சூடேற்றுவது ஊடகங்களுக்கான வளர்ச்சி. 20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று அமெரிக்க இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இரண்டாயிரம் பொருட்களுக்கு 45 ஆண்டுகளாக வழங்கி வந்த வரிச்சலுகையை நீக்கி விட்டது. தனிமனிதனின் குடும்ப நிருவாகம் போலத்தான் நாட்டின் நிருவாகமும். வெற்று வாய்ச்சொல் வீரர்களைத் ஆட்சியாளர்கள் ஆக்கி விட்டால் பிரச்சனைதான். மோடி பணமதிப்பிழப்பு செய்யாதிருந்திருந்தால், அமெரிக்காவின் இந்த வரிச்சலுகைகளை இழந்திருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. என்ன செய்ய? இந்தியாவில் மின்னணுப் பொருட்களில் இருந்து குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வரை சீனாவின் உற்பத்திகள் தாம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் மூண்டதாக ஊடகங்களும் பரபரப்பு கிளப்பி வருகின்றன. உலகில் முதன் முதலாக தமிழ்நாட்டின் மீதுதான் இந்தப் புகார் எழுந்தது. எகிப்து இளவரசி கிளியோபட்ரா குளிப்பதற்கு பாலையும், பாலில் ஊறவைப்பதற்கு தமிழக கொற்கை முத்துக்களையும் பயன்படுத்தினார் என்று அந்த நாட்டு அறிஞன், 'தமிழகம், எகிப்தின் மீது வர்த்தகப் போர் தொடுக்கிறது' என்று குற்றம் சாட்டினான். உலகின் முதல் கடலோடியான தமிழன், தமது உற்பத்தி பொருட்களான ஏலம், கிராம்பு, மயில்தோகை, முத்துக்கள், துகில்கள் ஆகியவற்றை கப்பலில் ஏற்றிச் சென்று தாம் வணிகம் புரிந்து வந்த நாடுகளில் பொன்னையும், குதிரைகளை மட்டும் ஈடாகப் பெற்று வந்தான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,172.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.