தரைதட்டிய எவர்கிவன் கப்பலை பல நாட்கள் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கப்பலை எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் அதிகார அமைப்பு கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சூயஸ் கால்வாய் நிர்வாகம் செய்த வேலைக்குக் கிட்டதட்ட 900 மில்லியன் டாலர் கொடுத்துட்டு நகர உத்தரவிட்டுள்ளது. தரைதட்டிய எவர்கிவன் கப்பலை பல நாட்கள் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கப்பலை எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் அதிகார அமைப்பு கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சூயஸ் கால்வாய் நிர்வாகம் செய்த வேலைக்குக் கிட்டதட்ட 900 மில்லியன் டாலர் கொடுத்துட்டு நகர உத்தரவிட்டுள்ளது. எவர்கிவன் கப்பலின் உரிமையாளரான சோய் கிசென் கைசா நிறுவனத்திடம், கப்பல் கால்வாயில் ஏற்படுத்திய சேதம் மற்றும் தரைதட்டி நின்ற காலத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளுக்கு இழப்பீடாக 900 மில்லியன் டாலர் தொகையை சூயஸ் கால்வாய் அதிகார அமைப்பு கோரியுள்ளது. இதற்கு சோய் கிசென் கைசா நிறுவனம் குறிப்பிட்டத் தொகையைக் குறைக்கக் கோரி கலந்துரையாடல் நடத்தி வருகிறது கடல் வழி போக்குவரத்தில் இதுபோன்ற ஏதேனும் எதிர்பாரா நிகழ்வு அல்லது பழுது ஏற்பட்டால் அதற்கான தொகையைக் கப்பல் உரிமையாளர் மட்டும் அல்லாமல் கப்பலில் சரக்கு வைத்துள்ளவர்களும் சரிசமமாகப் பங்கீடு செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள பொதுவான விதி. இந்த விதியின்படி, தற்போது கோரப்பட்டு உள்ள 900 மில்லியன் டாலர் தொகையில் 450 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையை, சோய் கிசென் கைசா நிறுவனமும், மீதமுள்ள 450 மில்லியன் டாலரை எவர்கிவன் கப்பலில் சரக்கு வைத்துள்ளவர்களும் செலுத்த வேண்டும். எவர்கிவன் கப்பல் முடங்கி நிற்கும் இந்த நிலையில் சூயஸ் கால்வாய் நிர்வாகம் எவர்கிவன் ஊழியர்களைப் பாதுகாப்பாகவும், அனைத்து வசதிகளையும் செய்துக்கொடுத்து வருகிறது. இதேபோல் எவர்கிவன் கப்பல் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் முழுமையாக அளிக்கப்பட்டும் வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
02,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: சர்வதேச கடல் வழி போக்குவரத்தின் மிக முதன்மைக் கால்வாயாக விளங்கும் சூயஸ் கால்வாயில் எவர்கிவன் பேரளவு கப்பல் சிக்கிக்கொண்ட நிலையில், இக்கால்வாய் போக்குவரத்து மொத்தமாக முடங்கியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



