Show all

புகார்! கைலாசா நாட்டில் உணவகம் அமைக்க ஆசைப்பட்ட குமார் மீது

பாதுகாப்பாக யாராவதுதான் கைலாசவிற்கு நித்தியானந்தாவை அனுப்பியிருக்க வேண்டும். அதுவும் ஒரு குழுவாகவே செயல்பட்டிருக்க வேண்டும். அந்தக் குழுவினர் குறித்த தேடல் ஒன்றும் காணோம். ஆனால் பாவம். விளையாட்டாக கடிதம் எழுதினார். அனுப்பக்கூட இல்லை. இந்திய அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக குமார் மீது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கைலாசா நாட்டில் உணவகம் திறக்க அனுமதிக் கோரி நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியதாக மதுரை கோயில் நகர உணவக உரிமையாளர் மீது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க முகாந்திரம் இருக்கிறதா என்று விவாதம் இணையத்;தின் பேசுபொருளாகியிருக்கிறது. 

நித்யானந்தா கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இங்கு தனிக் கொடி, தனி எல்லைக்கடவு ஆகியவற்றை உருவாக்கிய அவர் தனியாகச் செலாவணியையும் உருவாக்கியுள்ளார். 

இந்நிலையில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் உணவகம் வைக்க அனுமதி கோரி மதுரை கோயில் நகர உணவக நிறுவனர் குமார் என்பவர் நித்யானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

இந்தக் கடிதத்தை நித்தியானந்தாவிற்கு அனுப்ப வழியேதும் அறியாத குமார்- செய்தியாளர்கள் மூலமாக எப்படி கைலாசா நாடுகளின் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறதோ அதேபோல் இந்த கடிதமும் சென்றடையும் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு நித்யானந்தாவும் பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில் இந்திய அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக குமார் மீது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் குமார் அவர்கள் மிகுந்த சமூக ஆர்வலர் என்றும் சாமி பக்தி மிகுந்தவர் என்றும் அவர் இந்த கடிதம் எழுதியது ஆர்வக்கோளாறின் காரணமாகவே. இது எப்படி தேசத்துரோகம் ஆகும். என்பதாக நிறைய கோபப்பதிவுகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.