மெக்சிகோ எல்லையில், வைக்கப்பட்டுள்ள 65 அடி உயர, கலைவேலைப்பாடு ஒன்று இப்போது பிரபலமாகியுள்ளது. இதைச் செய்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஓவிய கலைஞரான ஜேஆர். எல்லை நகரமான டெகாட் பகுதியில் இந்த ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. சுவரை தாண்டி ஒரு குழந்தை எட்டிப் பார்ப்பதை போல உள்ளது அந்த ஓவியம். ட்ரம்ப் எழுப்பும் தடை சுவரை தாண்டி குழந்தை எட்டிப் பார்ப்பதை போல உருவகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த கலைவேலைப்பாடு பிரபலமாகியுள்ளது. தம்படம் எடுப்பது, அதன் அருகே குழந்தைகளை விளையாடச் செய்வது என மக்களும் அந்த கலைநயத்திற்கு நேரடி ஆதரவு அளித்து வருகிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்கு அதே இடத்தில் இந்த ஓவியம் இருக்கும். ‘நான் அகதிகளாக வரும் குழந்தைகளைப் பார்த்து அந்தக் கற்பனையில் வரைந்த ஓவியம்தான் இது. ஆனால் இப்போது ட்ரம்ப் உத்தரவுடன் இது எதேர்ச்சையாக பொருந்தி விட்டதால் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது’ என்று தனது படைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி நெகிழ்கிறார் ஜேஆர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் குழந்தைகள் கொண்டுவரப்படுவதாக கூறி, அதை தடுக்கும் வகையில் கையில் எடுத்துள்ள திட்டமே, இந்தக் கலை ஓவியத்திற்கு உருவகமானது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.