7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு சட்டமுன் வரைவின் மீது முடிவெடுக்க காலக்கெடு தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழரை விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்காக அதிமுக அரசுடன் இணைந்து திமுக போராட தயார் என ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதில் மடல் எழுதியுள்ளார். அந்த மடலில் ஆளுநர் கூறுகையில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு சட்ட முன்வரைவின் மீது முடிவெடுக்க 3 முதல் 4 கிழமைகளுக்கு காலக்கெடு தேவை. என்னை சந்தித்த அமைச்சர்களிடமும் 3 முதல் 4 கிழமைகள் காலக்கெடு தேவை என குறிப்பிட்டிருந்தேன். நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு குறித்து அனைத்து கோணங்களில் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என ஆளுநர் பதில் மடலில் தெரிவித்துள்ளார். ஆளுநர் கேட்ட அதிகபட்சக் காலக்கெடு நான்கு கிழமை அதாவது 28 நாட்கள் என்ற நிலையில், ஆளுநர் இந்த மடலை நேற்று எழுதியுள்ள நிலையில் காலக்கெடு இருப்பு நாட்கள் 27 மட்டும் உள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.