முன்னிலை, படர்க்கை காட்சிகளைப் படம் எடுக்கும் ஆர்வத்தைத் தாண்டி தற்;;;;போது தன்மைக் காட்சியை படமெடுக்கும் ஆர்வம் மிகுந்து அதற்கான சிறப்பு பேசிகள் எல்லாம் சந்தையைக் கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நோக்கியாவின் புது மிடுக்குப் பேசி நோக்கியா8. தன்மை முன்னிலை என்கிற இருமைக் காட்சிகளை படமெடுக்கும் வயைhக வெளிவந்திருக்கிறது. ஆகஸ்ட் 16அன்று அறிமுகமானது நோக்கியா8 மிடுக்குப்;;பேசி. 5.3 அங்குல தொடுதிரை, கொரில்லா கண்ணாடி, ஸ்னாப்டிராகன் 835 ஆக்டா கோர் பிராசெஸர், 4ஜிபி ரேம், 64ஜிபி ரேம் இரட்டை பின்பக்க படக்கருவி, 13எம்பி முன்பக்க படக்கருவி, ஆண்ட்ராய்ட் நோகட் இயங்குதளம், 3090மைக்ரோ ஆம்பியர்மணி மின்கலம் என பல கவர்ச்சிகரமான அம்சங்கள் கொண்டது. இதில் தன்மைப்படக்காட்சி மோகத்தை மறக்கச் செய்யும் புதிய தொழில்நுட்பம் இருப்பது தனித்துவமானது. அதற்குப் பெயர்தான் தன்மைமுன்னிலை இருமைப் படக்காட்சி. அதாவது, மற்ற செல்;பேசிகளில் முன்பக்க படக்கருவி அல்லது பின்பக்க படக்கருவியில் ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். ஆனால், நோக்கியா8 செல்பேசயில் பின்பக்கத்தில் உள்ள இரட்டைபடக்கருவி மற்றும் முன்பக்க படக்கருவியை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதி உண்டு. இந்தச் செல்பேசியில் எடுக்கும் இருமைப்படக்காட்சி காணொளியை ஒரே க்ளிக் மூலம் நேரடியாக வலையொளி மற்றும் முக்நூலில் நேரலையாக ஒளிபரப்பும் வசதியும் உள்ளது. இந்த இருமைப்படக்காட்சி தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் முதல் செல்பேசி என்பதால் நோக்கியா8 செல்பேசி முன்பதிவு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இனி வரும் காலத்தில் தன்மைப் படக்காட்சி மோகம் மறைந்து இருமைப் படக்காட்சி மோகம் அதிகமாக இந்த செல்பேசி தொடக்கமாக அமையலாம்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



