Show all

வெடித்து சிதறிய ரெட்மி மிடுக்குப் பேசி: அதிர்ச்சியில் மக்கள்

கடந்த கிழமை ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர் கால்சட்டைப் பையில் இருந்த ரெட்மி நோட்4 வெடித்துச் சிதறியது.

செல்பேசி வெடித்ததில் ஆடையில் தீப்பற்றி அந்த நபருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காரணம் இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி மிடுக்குப் பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சற்று அதிகம். சாம்சங் நோட்7, ஐபோன் உள்ளிட்டவை வெடித்துச் சிதறி மக்களிடையே பீதியை கிளப்பிய நிலையில், பலரின் அபிமான மிடுக்குப் பேசி ரெட்மியும் வெடித்துச் சிதறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சியோமி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

வெடித்து சிதறிய ரெட்மி நோட்4 மிடுக்குப்பேசி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வில், பேசிக்கு வெளிப்புறம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேசியின் உறை மற்றும் மின்கலம் சிதைந்து, பேசியின் திரை உடைந்துள்ளது. பேசியில் மேலும் சில ஆய்வுகள் நடத்திய பின்னரே வெடித்து சிதறியதற்கான முழுக்காரணம் தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.