திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் வருகை தேவையா? என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு மற்றும் ஆய்வுரை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கணேசன் தலைமையில் பொதுக் கூட்டத்தில் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்று பேசுகிறார். இதில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். மாநாடு நடைபெறும் உழவர் சந்தை திடலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காந்தி, காமராசர் ஆகியோரது படங்களுடன் ரஜினிகாந்த், தமிழருவி மணியன் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மதுவற்ற மாநிலம், உண்மையாக இருப்போம், ஊழலற்ற தமிழகம் அமைப்போம் எனும் கருத்தியல் பாதாகைகள் மேடை முகப்பில் வைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் திரண்டு வருவதால் உளவுத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



