Show all

தீயாகிவரும் காணொளி! வணக்கம் என்று தெடங்கி தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் பிரிட்டன் தலைமைஅமைச்சர் போரிஸ் ஜான்சன்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள போரிஸ் ஜான்சன், தமிழ் மக்களுக்கு நன்றி கூறி வெளியிட்ட காணெளி தீயாகி வருகிறது.

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள போரிஸ் ஜான்சன், தமிழ் மக்களுக்கு நன்றி கூறி வெளியிட்ட காணெளி தீயாகி வருகிறது.

தமிழர்களுக்கு வணக்கம் என்று தொடங்கி நன்றி தெரிவித்தார் பிரிட்டன் தலைமைஅமைச்சர் போரிஸ் ஜான்சன் என்றால் உலகத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள் ஆனால் இதே போன்று மோடி எத்தனையோ முறை தமிழைப் பாராட்டுவதையும், தமிழில் நன்றி தெரிவிப்பதையும் முன்னெடுத்திருக்கிறாரே இந்தத் வீணாய்ப் போன தமிழர்கள் ஏன் கொண்டாட மறுக்கின்றனர் என்கிற ஒரு கேள்வி பாஜக ஆதரவுத் தளத்தில் இருந்து பலமுறை கேள்வி எழுகிறது. 

உண்மையில் தமிழ் மக்கள் மோடியின் முன்னெடுப்புகளில் மகிழ்ச்சி கொள்ளாமல் இல்லை. படிப்பது இராமயணம் இடிப்பது பெருமாள் கோயில் (பாராட்டுவது தமிழ்- பல்கலைக்கழக சட்டமுன்வரைவு பதிகை செய்வது- சமஸ்கிருதத்திற்கு) என்பதான நடவடிக்கையில் ஈடுபட்டுதாம் மோடி பெயரைக் கெடுத்துக் கொள்கிறார். 

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் தொன்மையான மொழி, உலகின் மூத்தமொழி என்று பாராட்டுவார் ஆனால் இரண்டு நாட்கள் கழித்து சம்ஸ்கிருத பல்கலைக்கழக சட்டமுன்வரைவை பதிகை செய்வார். அவர் தமிழைப் பாராட்டுவது குறித்து தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் சமஸ்கிருதம்தான் முதல்மொழி என்பதாக அதற்கு பல்கலைக்கழக சட்டமுன்வரைவு பதிகை செய்யும் போது- தமிழரின் எதிர்வினையாடல்- அவர் தமிழைப் பாராட்டியதை மதிக்காதது போல் முகம் மாறி விடுகின்றது.

உலகில் எந்த தலைவராவது தமிழைப் பாராட்டுகின்றனர் என்றல் அடுத்து அந்த நாட்டில் தமிழுக்கு ஒரு ஆதாயத்தையும் முன்னெடுக்கின்றனர். அதனால்தான், கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ, மலேசியாவிலோ, பிரிட்டனிலோ ஒரு தலைவர் தமிழைப் பாராட்டுகின்றார் என்றால் தமிழுக்கு ஏதோ ஒரு நன்மையை அவர்கள் முன்னெடுக்கப் போகின்றார்கள் என்று தமிழ்மக்கள் பெருமிதமாகக் கொண்டாடத் தொடங்கி விடுகின்றனர். 

பிரிட்டனில் 650 பாராளுமன்ற உறுப்பினர் இடங்களுக்கு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிங் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதாவது 365 இடங்களில் கன்சர்வேட்டிங் கட்சியும், இதற்கடுத்து 203 தொகுதிகளில் தொழிலாளர் கட்சியும் வெற்றி பெற்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிங் கட்சி பிரிட்டனில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

பிரெக்சிட் முன்னெடுப்பு நீண்ட காலமாக இழுபறியில் நீடித்து வரும் நிலையில், இந்தப் பிரச்சினைக்கு புதிய தலைமைஅமைச்சர் போரிஸ் ஜான்சன் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தேர்தல் நாளன்று காணொளி ஒன்றை போரிஸ் ஜான்சன் வெளியிட்டிருந்தார். அதில், “வணக்கம். எங்கள் நாட்டிற்கு தமிழ் சமூகம் செய்துள்ள அனைத்து கருத்துருக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய நலங்குச் சேவை, கல்வி, கல்வி சார்ந்த சாதனைகள், தொழில் ஆகியவற்றில் தமிழர்கள் மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். பிரெக்சிட்டில் இருந்து நாம் வெளியேறிவிட்டால் தொழில்முனைவோர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க முடியும்.

தேசிய நலங்குச் சேவைக்கு உறுதுணையாக முதலீடுகளை அதிகரிக்க முடியும். ஆஸ்திரேலியாவில் இருப்பது போன்று பிரிட்டனிலும் குடியுரிமை அம்சத்தில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இதன்மூலம் உலகில் எங்கிருந்து பிரிட்டனுக்கு வந்தாலும் அனைவரையும் ஒரேமாதிரி கண்ணோட்டத்துடன் பார்க்கும் சூழல் ஏற்படும். உலகிலேயே வாழ்வதற்கு சிறந்த இடமாக பிரிட்டனை மாற்றியதில் அற்புதமான பங்களிப்பை அளித்த தமிழ் சமூகத்திற்கு மிக்க நன்றி. என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் கடந்த கால துயரங்களை மறந்து நீண்ட கால அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன் இலங்கை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையும் கொடுத்துள்ளார். இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாகி வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.