ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கிறிஸ் டேவிஸ் என்பவர் ஜம்மு - காஷ்மீருக்கு வருகை தரும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பயணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தான் காஷ்மீர் செல்ல மறுப்பு தெரிவித்தது பற்றிப் பேசியுள்ள அவர், ‘ஜம்மு -காஷ்மீர் செல்வதற்காக எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை நான் மறுத்துவிட்டேன். மோடி அரசை விளம்பரப்படுத்தும் நாடகத்தில் பங்கேற்க நான் தயாராக இல்லை’ என்று தெரிவித்துள்ளார். 13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய விடுதலையின் போது, தனிப்பேரரசாக விளங்கிய ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதற்கு, சிறப்புச் சட்டம் 370, 35அ ஆகிய பிரிவுகளின் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி வழங்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. பாஜக அரசின் இந்த நடவடிக்கையால் ஜம்மு- காஷ்மீர் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளதாகவும் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. ஆனால், பாஜக அரசு இந்தக் கருத்தை முழுமையாக மறுத்து வந்தது. ஜம்முவில் எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்றால் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், இதற்கு அனுமதி வழங்க பாஜக அரசு மறுத்துவிட்டது. தடையை மீறி அங்கு சென்ற ராகுல் காந்தியும் திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் சென்று ஆளுநர், அதிகாரிகள் மற்றும் மக்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி அங்குள்ள நிலவரத்தைக் கண்டறிய ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் விரும்பினர். இதற்கிடையில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கிறிஸ் டேவிஸ் என்பவர் ஜம்மு - காஷ்மீர் பயணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் கிறிஸ். தான் காஷ்மீர் செல்ல மறுப்பு தெரிவித்தது பற்றிப் பேசியுள்ள அவர், ஜம்மு -காஷ்மீர் செல்வதற்காக எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை நான் மறுத்துவிட்டேன். மோடி அரசை விளம்பரப்படுத்தும் நாடகத்தில் பங்கேற்க நான் தயாராக இல்லை. காஷ்மீரில் மக்களாட்சிக் கொள்கைகள் தகர்ந்து வருகின்றன என்பது மிகத் தெளிவாக உள்ளது. அங்கு சென்று, எல்லாம் நன்றாகவே உள்ளது எனக் கூறி பாசாங்கு செய்ய எனக்கு விருப்பமில்லை. காஷ்மீரை உலகம் கவனிக்கத் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஐரோப்பாவில் உள்ள பெண்களின் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை அமைப்புதான் பாராளுமன்ற உறுப்பினர்களின் காஷ்மீர் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் மின்அஞ்சல் மூலம் டேவிசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த மின்அஞ்சலுக்குப் பதில் அளித்தவர், நான் காஷ்மீர் வந்தால் தனியாகச் சுதந்திரமாகப் பாதுகாப்புகள் எதுவும் இல்லாமல் மக்களிடம் பேச வேண்டும் எனப் பதில் அளித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,321.
ஆனால் இந்தியாவை ஆளும் வாய்ப்பு பெற்றுள்ள பாஜக அரசு தன்னிச்சையாக கடந்த 20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (05.08.2019) அன்று நீக்கியது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது காஷ்மீர், லடாக் என இரு ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பால் அங்கு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக் கூடாது என்பதற்காக- இணையம், செல்பேசி போன்ற அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்பாகவே இப்படிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நேற்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிநகருக்கு வந்து இறங்கினர். அங்கு இருக்கும் ராணுவ அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து அவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மக்களைச் சந்தித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.