தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை முடிந்து இரண்டு கிழமைகளுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஒரு கிழமை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன்பின் மழையளவு பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் ஈழம் அருகே இந்தியப் பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பல இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. 13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குமரிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பல இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை முடிந்து இரண்டு கிழமைகளுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஒரு கிழமை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன்பின் மழையளவு பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் ஈழம் அருகே இந்தியப் பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ளது. இந்தக் காற்றழுத்த பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின் ஆழ்ந்த மண்டலமாகவும் அதாவது புயல் சின்னமாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே குமரிக் கடல் அரபிக் கடல் பகுதிகளிலும் வங்கக் கடலில் மன்னார் வளைகுடா பகுதியிலும் கடல் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். இந்த பகுதிக்குள் நுழைய மீனவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. குமரிக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்றால் ஓமனை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கனவே ஓமனை நோக்கி சுழன்று கொண்டிருக்கும் கியார் புயலை பின்தொடர்ந்து புதிய புயலும் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் இன்று மட்டும் மிதமான மழை பெய்யலாம் என்றும் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,321.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.