ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் கருவியை கண்டுபிடித்தால் உரிய பரிசு வழங்கப்படும் என்றும் அந்தக் கருவியை சந்தைப் படுத்தவும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார். 13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் கருவியை கண்டுபிடித்தால் உரிய பரிசு வழங்கப்படும் என்றும் அந்த கருவியை சந்தைப் படுத்தவும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது முகநூல் பதிவு: இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும். அதற்கு மிகவும் வேகமான தீர்வுகள் தேவை. இதற்கு தீர்வு காண தகவல் தொழில்நுட்பத் துறை மாபெரும் போட்டிக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க உதவும் கருவியை கண்டுபிடிப்போருக்கு தகுந்த பரிசு வழங்கப்படும். யார் வேண்டுமானாலும் கருவியைக் கண்டுபிடிக்கலாம். செயல்படும் நிலையில் இருக்கும் கருவியுடன் வருவோருக்கு பரிசு வழங்கப்படும். ஆழ்துளை கிணறு தோண்டப்படும் தொடக்க நிலையில் அதன் அட்சரேகை தீர்க்க ரேகையைச் சுட்டிக்காட்டி அதை ஒரு பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்வதில் இருந்து கண்டுபிடிப்பைத் தொடங்கலாம். மேலும் இந்தக் கருவியை சந்தைப்படுத்த, அரசின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,321.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.