Show all

பாஜக அதிர்ச்சி! பேரளவான உறுதியான போராட்டம்- அதுவும் வடஇந்திய மக்களே முன்னெடுக்கும் போராட்டம்- உலக அளவில் கவனம் பெறுவதால்-

டெல்லியில் இன்று பதினாறாவது நாளாக தொடரும் உழவர்கள்  போராட்டத்திற்கு ஆதரவாக, கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கருத்து தெரிவித்திருப்பது ஒன்றியத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கிற பாஜகவிற்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒற்றியத்தை ஆண்;டுவரும் பாஜக முன்னெடுக்கும் அனைத்துச் சட்டங்களும் மக்கள் விரோதப் போக்கானவைகளாகவே இருக்கின்றன என்று தமிழகம் சுட்டிக் காட்டி வந்து கொண்டிருந்த நிலையில், கிள்ளுக் கீரையாக மதித்து வந்தது ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜக. நீட்டுக்கு எதிராக தமிழகம் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டங்களும், வழக்குகளும் மற்றும் டெல்லியில் அய்யாக்கண்ணு முன்னெடுத்த போராட்டமும் அதற்கு எடுத்துக்காட்டுக்கள்.

கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வட இந்தியப் பகுதி மாநில வேளாண் பெருமக்கள் பதினாறு நாட்களாகப் பேரளவாகப் போராடி வருகின்றனர். ஒன்றியத்தை ஆண்டுவரும்; பாஜக தெனாவெட்டாக, குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பற்பல சட்டங்களை முன்னெடுத்து வருகிற நிலையில், இந்தப் போராட்டமும் அது உலக அளவில் கவனம் பெறுவதும் ஆளும் பாஜகவிற்கு அறநெருக்கடியாக அமைந்துள்ளது. 

ஆம். கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ,  இரண்டாவது முறையாக இந்தியாவில் போராடிவரும் உழவர்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என இந்தியா எச்சரிக்கை விடுத்தது பற்றி செய்தியாளர்கள் கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ,  உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் அமைதியான  போராட்டத்திற்கு கனடா துணை நிற்கும்.  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கலந்துரையாடல் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், கனடா தலைமைஅமைச்சர் மீண்டும் உழவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது ஒன்றியத்தை ஆளும் பாஜக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.