தமிழகம் மீட்போம்! என்ற தலைப்பில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது திமுக. 26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகம் மீட்போம்! என்ற தலைப்பில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது திமுக. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக கலந்து கொள்ளும் தமிழகம் மீட்போம்! எனும் தலைப்பிலான சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் மாவட்டங்கள் குறித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. திமுக தலைவர் ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தருமபுரி, சேலம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொளி மூலமாக தமிழகம் மீட்போம்! எனும் தலைப்பிலான சட்;டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, மூன்றாவது கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஞயிற்றுக் கிழமை அன்று முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார் கமல் ஹாசன். ஆனால் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் அதை முன்னெடுப்பதுதான் நெருடல். ஏனென்றால், இந்தியாவிலேயே சீரமைக்கப்பட்ட, தன்னிறைவு பெற்ற, ஒரு இனிமையான மண் என்றால் அது தமிழகம் மட்டுமே. உண்மையில் தமிழகத்தைச் சீரமைக்க ஒன்றும் இல்லை. சீரமைந்த தமிழகத்தின் தன்னிறைவை, மேன்மையை, கல்வியை, மருத்துவத்தை, அண்ணா பல்கலைக்கழகத்தை, இனிமையான சூழலை சிதைக்கும் அடாவடியை அதிமுகவின் தோளில் அமர்ந்து அரங்கேற்றி வருகிறது ஒன்றிய ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி பாஜக. அதிமுகவை வீழ்த்தி பாஜகவை தனிமைப் படுத்தி சீரமைந்த தமிழகத்தின் தன்னிறைவை, மேன்மையை, கல்வியை, மருத்துவத்தை, அண்ணா பல்கலைக்கழகத்தை, இனிமையான சூழலை தக்க வைக்க வேண்டியதுதான் தற்காலத்து தமிழகத்தின் தேவையாகும். அந்த முயற்சிக்கு எதிர் நிலைத் தலைப்புகளை முன்னெடுக்கிற கட்சிகளை பாஜக ஆதரவு நிலைப்பாட்டு கட்சிகள் என்று முடிவு செய்யலாம்.
சனிக்கிழமை- ராமநாதபுரம், திங்கட் கிழமை- திண்டுக்கல் வியாழக் கிழமை- கடலூர் அடுத்த சனிக்கிழமை - திருவள்ளூர் புதன் கிழமை - சிவகங்கை சனிக் கிழமை - தஞ்சை அதற்கடுத்த திங்கட் கிழமை – நாகை மற்றும திருவாரூர், செவ்வாய்க் கிழமை - திருவண்ணாமலை, வியாழக் கிழமை - அரியலூர் மற்றும் பெரம்பலூர் என்று நடப்பு ஆங்கில மாதம் முழுமைக்கும் நிகழ்ச்சி நிரலை திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



