உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தற்போது அதிகமாக காணப்படும் பிரச்சினை குழந்தைகள் மிடுக்குப்பேசிகளுக்கு அடிமையாகி இருப்பது தான். ஆனாலும் குழந்தைகள் செல்பேசிக்கு அடிமையாகமல் காப்பதில்- பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; தமிழகத்திலிருநது இந்தேனேசியாவரை 11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தற்போது அதிகமாக காணப்படும் பிரச்சினை குழந்தைகள் மிடுக்குப்பேசிகளுக்கு அடிமையாகி இருப்பது தான். இந்தியாவிலும் இப்பிரச்சினையின் வீரியம் மிக அதிகம். தமிழ்நாட்டு நிலைமை இன்னும் மோசம். சாப்பிடுவதற்கு, தூங்க செல்வதற்கு என அனைத்துக்கும் செல்பேசி இல்லாமல் குழந்தைகளிடம் காரியம் சாதிக்க முடிவதில்லை. ஓடி ஆடி விளையாட வேண்டிய அகவையில், உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் தலைக்குனிந்தபடி செல்பேசிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் இங்கு ஏராளம். இதனால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பெற்றோர்களிடையே தற்போது ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது போதிய அளவில் இல்லாததால், பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில்தான்- மிடுக்குப்பேசிகளுக்கு அடிமையாகிக்கிடக்கும் குழந்தைகளை அதில் இருந்து மீட்க இந்தோனேசியாவில் அருமையான திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள பாந்தங் எனும் நகரில் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சு வளர்க்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கோழிக்குஞ்சு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வருவதற்கு முன்பும், பள்ளி முடிந்த பின்னரும் அவற்றிற்கு மாணவர்கள் உணவு அளித்து வளர்க்க வேண்டும். வீட்டில் இட வசதி இல்லாதவர்கள் பள்ளியிலே வைத்து கோழிக்குஞ்சுகளை வளர்க்கலாம். இத்திட்டம் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் செல்பேசியில் நேரம் செலவிடுவது குறையும் என பெற்றோர்கள் நம்புகின்றனர். எனவே பாந்தாங் நகர அதிகாரிகளை மக்கள் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை போன்ற நகரங்களில், சில குடும்பங்களில், கடற்கரை மணலை எடுத்து வந்து வீட்டில் விளையாடப் பழக்குகிறார்கள். சென்னையில் பெரும்பாலான அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் பூங்கா கட்டாயமாக அமைத்திருக்கிறார்கள். மேலும் அரசால் ஆங்காங்கே அமைக்கப்பட்ட பூங்காக்கள் சென்னையைப் பொறுத்த வரை முழுமையாகப் பயன்படுத்தப் படுகிறது. சென்னையில், நடுத்தரக்குடும்பங்களில் பலர் வணிக வளாகங்களுக்கு சென்று தங்கள் குழந்தைகளை பந்து போடுதல், பொம்மைகளை எடுத்தல், பந்துகளில் உருண்டு விளையாடுதல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுத்துகிறார்கள். இன்னும் நடுத்தர மக்கள் வசிக்கும் வீட்டு வசதிவாரியக் குடியிருப்புகளில் பக்கத்து அக்கத்து தெருக்களுக்குச் சென்று மிதிவண்டி, கயிறாட்டம், கண்ணாமூச்சு போன்ற தமிழர் விளையாட்டுகளுக்கு மக்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,349.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



