Show all

65 பானைகளில் பொங்கல் வைத்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளில்- தமிழக மக்கள்

விடுதலைப்புலிகளை அழித்து விட்டால், இலங்கையில் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்துவிடும் என்று மாய்மாளம் பேசியவர்கள் வளர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். தமிழர்கள் இன்னும் முள்வேலிக்குள்தாம் வாழ்க்கை நடத்துகிறார்கள்.  பிரபாகரன் அவர்களின் இந்த பிறந்த நாளில், மக்கள் பிரபாகரன் நல்லாட்சியை கொண்டாட தொடங்கி விட்டார்கள். 

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை- கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு, தமிழகம் கூடுதலாகக் கொண்டாடி வருகிறது. சிங்களப் பேரினவாதிகள் அண்ணன் தம்பிகளாக இலங்கையில் அரியணை ஏறி இருக்கும் கோபம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் எப்போதும் விடுதலைப்புலிகளுடன் நட்பு பாராட்டும் மாவட்டம். அதனால் தமிழ் ஈழ உணர்வாளர்களும் அதிகம் உள்ள மாவட்டம். எந்தக் கட்சிகளில் இருந்தாலும், ஈழ உணர்வு அதிகம் கொண்டவர்கள் என்பதால் பிரபாகரன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள் புதுக்கோட்டை மக்கள். பல்வேறு அமைப்புகளும், உணர்வாளர்களும் மக்களோடு தங்களை இந்தக் கொண்டாட்டத்தில் இணைத்துக் கொண்டனர். 

இந்தநிலையில் புதுக்கோட்டையில் தமிழ்தேசியக் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் தமிழ்நேசன் தலைமையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 65 வது பிறந்தநாளை 65 பானைகளில் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,349.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.