Show all

முதல் மூன்று இடத்தில் யார் யார் தெரியுமா? பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில், பிடித்தவர்கள் பட்டியலில், ஒரு இயங்கலை இதழ்கணிப்பில்.

ஒரு இயங்கலை இதழ், பிக்பாஸ் பருவம்-3 ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்ற கேள்வி எழுப்பி கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. அதில் மூன்று இடங்களில் யாருக்கு வாக்களிக்கப் பட்டிருக்கிறது தெரியுமா?

14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பருவம்-3 நிகழ்ச்சி பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளை ஞாயிற்றுக் கிழமை கமலின் தொகுப்புரை எப்படி அமையப் போகிறது? தங்கத்தமிழ்ச் செல்வன் திமுகவிற்கு சென்று பரபரப்பாக்கியுள்ள நிலையில், கமல் என்னென்ன அரசியல் நச்சுகளை உதிர்த்து கைத்தட்டல் பெறப்போகிறார். பிக்பாஸ் பருவம் மூன்று நிகழ்ச்சிக்கு பதினாறாவதாக வந்த மீராமிதுன் அகவை முதிர்ந்த அப்பா மோகன் வைத்தியாவை சீண்டிய ஒரு குற்றச்சாட்டின் மீது கமல் பார்வை எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஒரு இயங்கலை இதழ் பிக்பாஸ் பருவம்-3 நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது. 

அந்தக் கருத்துக் கணிப்பில் இருபத்தி இரண்டு விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் சேரன் மற்றும் லாஸ்லியா இரண்டு பேர்கள் நிற்கிறார்கள். இரண்டாம் இடத்தில் கவின் 13 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தில் 7 விழுக்காடு வாக்குகளை சாண்டி பெற்றுள்ளார். நான்காம் இடத்தில் சரவணன் 6 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளார். ஐந்தாம் இடத்தில் மதுமிதா, பாத்திமாபாபு, செரின் ஆகியோர் 5விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளனர். மூன்று விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஆறாம் இடத்தில் இருக்கிறார் அபிராமி. ஏழாம் இடத்தில் முகன்ரெவ், சாக்சி, ரேஷ்மா, தர்சன், மோகன் வைத்தியா இரண்டு விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளனர். வனிதா ஒற்றை விழுக்காடு வாக்கு பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார். பதினாறவதாக வந்த மீராமிதுனை இந்த இயங்கலை இதழ் பட்டியலிடவேயில்லை. 

இனி வரும் காலங்களில் பிக்பாஸ் பருவம்-3 நிகழ்ச்சியில் யார் யார் எந்த இடங்களை பெற்று இறுதியில் யார் வெற்றியாளர் தகுதியை தட்டப் போகிறார்கள் என்பதை அறிய இன்னும் 93 நாட்கள் பிக்பாஸ் பருவம்-3 நிகழ்ச்சியில் இருப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,198.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.