14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதல், இந்திய விமானப்படையின் தாக்குதல்களை அடுத்து: இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மொரிசே பெய்னே வெளியிட்டுள்ள அறிக்கையில்: இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது, பிராந்தியத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கையை இருதரப்பும் கைவிட வேண்டும். பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்பதே எங்களுடைய வலியுறுத்தலாகும். புல்வாமா தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலை அடுத்து இருதரப்பு இடையிலான மோதல் போக்கு கவலையளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,075.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.