20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஷ்ய உலங்கு வானூர்திகள் வானில் ஒன்றன் மீது மற்றொன்று மோதிய விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் சைபீரியா பகுதியில் நடந்துள்ளது. வட மேற்கு சைபீரியாவின் வான்கோர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. எம்ஐ-8 வகை உலங்கு வானூர்தி 15 பயணிகள், 3 பணியாளர்களுடன், இறங்குதளத்;தில் இருந்து மேலே கிளம்பியபோது, மேலே பறந்து கொண்டிருந்த மற்றொரு சரக்கு உலங்கு வானூர்தி மீது மோதியது. இதையடுத்து பயணிகள் உலங்கு வானூர்தி கீழே நொறுங்கி விழுந்ததில், 18 பேரும் பரிதாபமாக பலியானார்கள். மற்றொரு உலங்கு வானூர்தி பத்திரமாக தரையிறங்கிவிட்டது. எண்ணை கிணறு பகுதிக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு உலங்கு வானூர்தி புறப்பட்டபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,870.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



