Show all

பாஜகவிற்கு நோட்டாவை முறியடிக்க ஓர் அரிய வாய்ப்பு! திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மறைவிற்கு பின், மாநிலத்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள், அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கின் இழுபறி: எடப்பாடி-பன்னீர் அதிமுக ஆட்சியைக் தொடர்ந்து காப்பாற்;றி வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் போஸ், மாரடைப்பால், அண்;மையில் இறந்தார். அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இத்தொகுதிக்கு, ஆறு மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால், அரசியல் கட்சிகளுக்கு, திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை, செயலலிதா முதல்வராக இருந்த போது நடந்த, பல சட்டமன்ற இடைத்தேர்தல்களில், அக்கட்சி வெற்றி பெற்றது. செயலலிதா மறைவிற்கு பின், அவரது சொந்த தொகுதியான, இராகிநகரில், அதிமுக தோல்வியை தழுவியது.

இருப்பினும், பாஜக நடுவண் அரசு புண்ணியத்தில், கட்சி கட்டுக்கோப்பாக இருப்பதாக காட்டப் பட முடிகிறது.; திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் வாயிலாக, ஓட்டு வங்கியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், அதிமுக உள்ளது. 

அமமுக துணை பொதுச்செயலர், தினகரனை பொறுத்தவரை, திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்றால் அடுத்த தமிழக முதல்வர் அவர்தான். 

திமுகவை பொறுத்த வரை, ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, எதிர்க்கட்சியாகவே உள்ளது. தற்போது, தமிழகத்தில், திமுக ஆதரவு அலை வீசுவதாக, அக்கட்சியினர் நம்புகின்றனர். உண்மையாகவே, திமுக ஆதரவு அலை இருந்தால், திருப்பரங்குன்றத்தில், அக்கட்சி வெற்றி பெற்றாக வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால்தான், அடுத்தாண்டு நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், திமுகவிற்கு திருப்புமுனை கிடைக்கும். எனவே, இத்தேர்தலில் கட்டாய

வெற்றியை நோக்கி, திமுகவினர் காய் நகர்த்த வேண்டிய தேவை உள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொந்த மாவட்டமாக, மதுரை உள்ளது. எனவே, சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய கட்டாயம், விஜயகாந்திற்கு உள்ளது. 

தேசிய கட்சியான, பாஜகவை பொறுத்தவரை, இந்தியாவே தங்களுடையதுதான் என்று பீற்றிக் கொள்ள நோட்டவை முறியடித்தாலே போதும் களத்தில் இறங்கி ஆட்டம் போடும் தமிழகத்து பாஜக தொண்டரடிப் பொடிகள். 

ஒட்டுமொத்தமாக, தமிழகத்தின் கட்சிகளுக்கு, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல், நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, தேர்தல் அறிவிப்பு வெளியாகாமல் இருக்க வேண்டும் என்று, தங்கள் விருப்ப தெய்வங்களை, எல்லா கட்சியினரும் வேண்ட தொடங்கி உள்ளனர். அதேநேரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியானால், பலத்தை நிரூபிப்பதற்கான வியூகம் வகுக்கும் பணிகளிலும், முதன்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,870.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.