எண்ணெய் நிறுவனங்கள் கையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் பொறுப்பை அளித்ததால், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில், தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜக ஆட்சியில், வரலாறு காணாத வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு மிதிவண்டியில் வந்தார். எண்ணெய் நிறுவனங்கள் கையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் பொறுப்பை அளித்ததால், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல ஒன்றிய பாஜக அரசு பாராமுகமாகவே உள்ளது. ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் மீது அடக்கவிலைக்கும் கூடுதலாக வரிவிதித்து பெட்ரோல் விலை உயர்வுக்கு தானும் முதன்மைக்காரணமாக இருந்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசு தனது வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி தமிமுன் அன்சாரி மிதிவண்டியில் வந்தார். அவரது மிதிவண்டியின் முகப்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அட்டையைக் கட்டியிருந்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.