கூகுளில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவில், அதற்காக தொடர்ந்து முயற்சித்த தமிழக இளைஞர் சியாம், அறுபது இலட்சம் ஆண்டு சம்பளத்தில் கூகுளில் இணைந்துள்ளார். 13,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கே.பி.சியாம்- சென்னையில் 12ம் வகுப்பு வரை படித்து, ஜே.இ.இ. தேர்வு எழுதி, இந்திய தொழில்நுட்ப கல்லூரி பெங்களூரில் பட்டப்படிப்பை முடித்தார். கூகுளில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவில், அதற்காக தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்த சியாம், ஏற்கனவே கூகுளில் வேலையில் இணைந்த நண்பர் உதவியுடன் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த ஆண்டு இயங்கலை மூலம் முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றார். பிற்கு ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி வென்றார். அடுத்து வரும் மாதத்தில் அவர் போலந்து நாட்டில் உள்ள மார்ஷவில் கூகுளில் இணைகிறார். அவரின் ஆண்டு சம்பளம் ரூ. 60 லட்சம் ஆகும். கூகுள் நிறுவனத்தின் க்ளவுட் பிரிவில் வேலை பார்க்க உள்ளார் அவர். ஏற்கனவே முகநூல் நிறுவனத்தில் லண்டனில் கடந்த ஆண்டில் நான்கு மாதங்கள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சியாமுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம். வெல்க சியாம்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,197.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.