Show all

எப்படியாவது கொரோனா கடலிருந்து மீண்டாக வேண்டுமே! 3000 ஆண்டு பழமையான மருத்துவத்தையும் தூசுதட்டி கையிலெடுக்கிறது சீனா!

கொரோனா தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தனது 3000 ஆண்டு பழமையான மருத்துவத்தை கையில் எடுத்துள்ளது சீனா. சீன மருத்துவத்தில் அக்குபங்ச்சர், மூலிகை மருந்து, சீங்கு பத்திய மருந்து ஆகியவை ஆகியவை முதன்மையான அம்சங்களாகும்.

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பல நூற்றாண்டுகளாக படிப்படியாக கொள்கை முறையிலும் நடைமுறையிலும் உருவெடுத்துள்ள சீன மருத்துவத்தில் அக்குபங்ச்சர், மூலிகை மருந்து, சீங்கு பத்திய மருந்து ஆகியவை ஆகியவை முதன்மையான அம்சங்களாகும்.

ஹான் திபெத் மங்கோலியா, உய்குர் உள்ளிட வெவ்வேறு சீன இனக்குழுக்கள் பயன்படுத்தும் எல்லா மருந்துகளுக்கும் சீன மருத்துவம் என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

சீன மருத்துவத்தில் நோய் அறிமுறைகளாக- கூர்ந்து கவனித்தல், கேட்டல், மற்றும் முகர்ந்து பார்த்தல், விசாரித்தல், நாடித்துடிப்பும் இதயத்துடிப்பும் அறிதல் ஆகியன அடங்கும். 

நோய்களைக் குணப்படுத்துவதற்காக மருந்துகள், அக்குபங்ச்சர், அறுவை சிகிச்சை போன்ற பல மருத்துவ முறைகளை சீன பழமை மருத்துவர்கள் பயன்படுத்தினார்கள். 

மிங் வம்சகாலத்தில் தான் மேற்கத்திய மருத்துவம் சீனாவில் அறிமுகமானது. அப்போது மருத்துவ இயலில் ஈடுபட்டிருந்தவர்கள் கீழை மருத்துவத்தையும் மேலை மருத்துவத்தையும் இணைக்கத் தொடங்கினர். 

கொரோனா தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தனது 3000 ஆண்டு பழமையான மருத்துவத்தை கையில் எடுத்துள்ளது சீனா. 

கூபே மாகாணத்தின் வுகான் நகரின் இறைச்சி சந்தையில் இருந்து உருவாகி பரவியதாக நம்பப்படும் கொரோனா தொற்று தாக்கி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். சீனாவில் நேற்று ஒரே நாளில் 142 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள். புதிதாக 2009 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. சீனாவும் தீவிர ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக முயற்சிகள் நடந்து வருகின்றன. இன்னும் வெற்றிகரமாக எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. 

இந்நிலையில்கொரோனா தொற்று தாக்குதல் அதிகம் பரவி உள்ள கூபே மாகாணத்தில் தனது பாரம்பரிய மருந்துகளை கொடுத்து முயற்சி செய்து வருகிறது. இந்த தகவலை கூபே மாகாண நலங்குத்துறை அமைப்பின் தலைவர் வாங் ஹெஷங் தெரிவித்தார். 

சுமார் 3000 ஆண்டு பழமையான சீன மருத்துவ முறை மருந்துகளை சீனா கொடுத்து வருகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறதாம். இதையடுத்து பாரம்பரிய சீன மருத்துவர்கள் சுமார் 2200 பேர் கூபே மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது பாரம்பரிய சீன மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.