வேறு ஒருவரை காரணமாக வைத்து விவாகரத்தை யாராவது வாங்குவார்களா? தனுஷ் எனது நலம் விரும்பி. இது தொடர்பில் வேறு எதையும் என்னிடம் கேட்காதீர்கள் என்கிறார் அமலாபால். 05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயக்குநர் விஜய்- நடிகை அமலாபால் திருமண முறிவுக்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று விஜய்யின் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் தெரிவித்திருந்தார். விஜய், இயக்கிய தெய்வத் திருமகள் படத்தில் நடித்தபோது இயக்குநர் விஜய், அமலா பால் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். முதலில் இந்தத் திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆனால் திருமணமான வேகத்தில் விஜய், அமலா பால் மணவிலக்கு பெற்றுவிட்டனர். இதுகுறித்து ஏ.எல்.அழகப்பன் தெரிவிக்கையில், திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று தான் அமலா பால் முடிவு செய்திருந்தார். ஆனால் தனுஷ் தான் தயாரித்த அம்மா கணக்கு படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன் பிறகே அமலா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது தான் விஜய், அமலா பால் பிரிய முதன்மைக் காரணம் என்று அழகப்பன் தெரிவித்துள்ளார். தனுஷ் தனது படத்தில் அமலாபாலை நடிக்க வைத்ததால் திருமணம் முறிந்ததாக வெளியிலும் பேசப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், எனது மணமுறிவு சர்ச்சை தேவை இல்லாதது. அது எனது சொந்த விருப்பம். விவாகரத்து வாங்கிய முடிவு முழுக்க என்னுடையதுதான். அதற்கு வேறு யாரும் பொறுப்போ காரணமோ இல்லை. வேறு ஒருவரை காரணமாக வைத்து விவாகரத்தை யாராவது வாங்குவார்களா? தனுஷ் எனது நலம் விரும்பி. இது தொடர்பில் வேறு எதையும் என்னிடம் கேட்காதீர்கள். இதை விட அதிகமாக பேசவும் நான் விரும்பவில்லை. என்று தெரிவித்துள்ளார் காட்டமாக அமலாபால்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



