21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கணினி மற்றும் செல்பேசிகளை தாக்கும் நச்சுப்பகை உலகில் நிறைய இருக்கின்றன. இந்த நிலையில் ஆண்ட்ராய்ட் பேசிகளை மட்டும் குறிவைத்து களமிறங்கி இருக்கும் நச்சுப்பகை தான்; ஓன்மீ. நச்சுப்பகை இது பேசிகளில் தானாக தரவிறங்கி அந்தப் பேசிகளுக்கு சொந்தக்காரர் தகவல்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்;;;;படுத்துகிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகவல்களைத் திருடவே இந்த நச்சுப்பகை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓன்மீ என்ற நச்சுப்பகை பேசிகளில் நாம் இணையத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போதே பின்பக்கம் தரவிறக்கப் பட்டு விடும். கிரிப்டோஜாக்கிங் என்ற முறையில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. நம்முடைய இணைய பயன்பாடும், நாம் தேடும் சில குறிப்பிட்ட தளங்களும் இந்த நச்சுப்பகை உள் நுழைய வாயிலாக இருக்கிறது. இது அதிகமாக பாதிப்பது வாட்ஸ்அப் செயலியைதான். ஆம், வாட்ஸ் ஆப்பிள் நாம் பேசும் தகவல்களை அதிகம் திருடவே இந்த நச்சுப்;பகை பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் முகநூல், படங்கள் ஆகியவையும் இதன் மூலம் முடக்கம் செய்யப்படுகிறது. வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பும் புகைப்படங்களில் திருடுவது, நாம் பேசுவதை திருடுவது ஆகிய வேலைகளை இது செய்கிறது. அதேபோல் நாம் செல்பேசியில் வைத்திருக்கும் 90 விழுக்காடு தகவல்களை இதன் மூலம் திருட முடியும். அதன்பின் நம்முடைய இணையம் மூலம் இந்த தகவல்களை தங்கள் சர்வருக்கு இவர்கள் ஏற்றிக்கொள்வார்கள். அதை வைத்து மிரட்டல் வேலைகளை இவர்கள் செய்வதாக கூறப்படுகிறது. இந்த நச்சுப்பகைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஆகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,933.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.