Show all

ஆப்பு கொடுத்தனவா நடுவண் மாநில அரசுகள், வீரப்பன் குறித்து துப்பு கொடுத்த சண்முகப்பிரியாவுக்கு! பரிசுகளை வழங்கவில்லையாம்

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வனப் பகுதி மக்கள் குறிஞ்சித் தலைவன் வீரப்பன் என்றும், ஆட்சியாளர்கள் சந்தனக் கடத்தல் வீரப்பன் என்றும் அழைக்கும், வீரப்பன் குறித்த தகவல்களைக் காவல்துறைக்கு அளித்த தமக்கு அறிவித்த பரிசுகளை மத்திய, மாநில அரசுகள் இன்னும் வழங்கவில்லை என கோவையைச் சேர்ந்த சண்முகபிரியா என்பவர் தெரிவித்துள்ளார்.

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகிய சண்முகப்பிரியா, வீரப்பனின் நடமாட்டம், வீரப்பனுக்கு கண்பார்வை குறைந்தது உள்ளிட்ட விவரங்களை அதிரடி படையினருக்கு அளித்துள்ளார். இதன் அடிப்படைகள் வீரப்பன் அவர்கள் வஞ்சகமாகக் கொல்லப்பட உதவிய நிலையில் உயிரை பணையம் வைத்து காவல்துறைக்கு உதவிய தமக்கு மத்திய - மாநில அரசுகள் அறிவித்த பரிசுதொகையான வீட்டுமனை பதக்கம் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என சண்முகப்பிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,934.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.