அமெரிக்காவில் கடந்த ஆண்டு, தேச பாதுகாப்பு காரணங்களுக்காக 9811 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி கடந்த ஆண்டு அமெரிக்காவில் 9811 இந்தியர்களை கைது செய்துள்ளதாக அந்நாட்டு குடிவரவு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகால கட்டத்தில் தேச பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் கைது செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 3,532 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 3,913 ஆகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 5,322 ஆகவும் இருந்த கைது எண்ணிக்கை, கடந்த ஆண்டு 9,811 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 831 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர், 620 பேர் நிர்வாக ரீதியாக கைது செய்யப்பட்டனர். பலர் தடுப்புக் காவலில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.