சில நாட்களாக அலை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது தன்னை திருப்பதி ஏழுமலையானைப் போல் வேடமிட்டு அந்தப் புகைப்படத்தை தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் நித்தியானந்தா. இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, எல்லைகடவு ஆவணம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. எனினும், அன்றாடம் காணொளி மூலமாக ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டே இருந்தார் நித்யானந்தா. சில நாட்களாக அவரின் அலை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது தன்னை திருப்பதி ஏழுமலையானை போல் வேடமிட்டு அந்தப் புகைப்படத்தை தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
28,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திரையில் நடிகர் கமல்ஹாசனுக்குப் பிறகு, நேரிலும் சமூக வலைதளங்களிலும் பலவித ஒப்பனைகளில் தன்னை காட்டிக் கொண்டவர் நித்யானந்த தான் என்று அவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.