மேற்கு வங்கத்தின் கூச் பிகார் வாக்குச்சாவடியில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. கூச் பிகார் வாக்குச்சாவடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இது குறித்து, திடீரென வன்முறை மூண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கூச் பிகார் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்தத் துப்பாக்கிச்சூட்டை ஒன்றியத் தொழில் பாதுகாப்பு படையினர் நடத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் மீதான இந்த வன்முறை முன்னெடுப்புக்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த வன்முறை முன்னெடுப்பு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கூச் பிகார் வாக்குச்சாவடி அருகே மாணிக் எம்.டி என்ற சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான். இரண்டு மூன்று உள்ளூர் பெண்கள் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். வாக்குச்சாவடியில் இருந்த ஒன்றியத் தொழில் பாதுகாப்பு படையினர் சிறுவனின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். அருகிலுள்ள உள்ளூர் காவலரின் வாகனத்தில் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்களா? என்றும் அவர்கள் உள்ளூர் மக்களிடம் கேட்டார்கள். அப்போது அங்கு இருந்த வேறு சில உள்ளூர் மக்கள், சிறுவனை ஒன்றியத் தொழில் பாதுகாப்பு படையினர் தாக்கியதாக நினைத்தார்கள், அத்தகைய தவறான புரிதலின் விளைவாக அங்கு இருந்த ஒரு சிலர் ஒன்றியத் தொழில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக எதிர்ப்புக் குரல் எழுப்பினார். இதனால் மேலும் 300-350 கிராமவாசிகள் ஒன்று சேர்ந்து ஒன்றியத் தொழில் பாதுகாப்பு படையினரைக் கடுமையான ஆயுதங்களை கொண்டு தாக்கினார்கள். இது தவிர அந்த கும்பல் வாக்குப்பதிவு அதிகாரிகளையும் தாக்க முயன்றது. இதனால் ஒன்றியத் தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் சில உள்ளூர் காவலர்கள் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கூடுதல் விரைவுப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் கட்டுக்கடங்காத கும்பல் அவர்களின் வாகனத்தைத் தாக்கியது. அந்தக் கும்பல் தொடர்ந்து வீர்ரகளையும் கொடூரமாக தாக்கியதால் வேறு வழியின்றி தங்கள் உயிரையும், தேர்தல் அதிகாரிகளையும், வாக்குபதிவு எந்திரங்களையும் காப்பாற்ற ஒன்றியத் தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து கும்பல் மறைந்து சென்றவுடன் ஒன்றியத் தொழில் பாதுகாப்பு படையினர், காவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அதிகாரிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக ஒன்றியத் தொழில் பாதுகாப்பு படை உள்ளூர் காவல் நிலையத்தில் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்துள்ளது, இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி அருகே நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒன்றியப் படைகளுடன் உள்ளூர் காவலர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எந்தப் படத்திற்கு எழுதப்பட்ட திரைக்கதையை, பொதுமக்கள் மீதான இந்த வன்முறை முன்னெடுப்புக்கு பொருத்தி அறிக்கை தயாரித்திருக்கின்றனர் தேர்தல் அணைய அதிகாரிகள்? இது அவர்களாகத் தயாரித்ததா? ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் எழுதிக் கொடுத்ததா? என்று கேட்கின்றனர், பொதுமக்கள் மீதான இந்த வன்முறை முன்னெடுப்புக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்,
28,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.