Show all

கொரோனா தொடர்பில் விசாரணை தேவைதான் என்கிறார் சீன அதிபர்! ஆனால் அதை கொரோனா அலை ஓய்ந்த பிறகே முன்னெடுப்பது சிறப்பு என்கிறார்

கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றி வருகிறோம். கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தபின், அது குறித்த விசாரணையைத் தொடங்குங்கள் என, சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றி வருகிறோம். கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தபின், அது குறித்த விசாரணையைத் தொடங்குங்கள் என, சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

உலக நலங்கு அமைப்பின், 73வது உலக நலங்குக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: கொரோனா நோய்த்தொற்று தொடர்பில் தொடக்கம் முதலே நாங்கள், வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடனும் பணியாற்றி வருகிறோம்.

கொரோனா நுண்ணுயிரித் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் தான், எவ்வாறு அது தோன்றியது, பரவியது, கையாளப்பட்டது என, உலக அளவில் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும். இந்த விசாரணை பாரபட்சமின்றி நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், 'கொரோனா நோய்த்தொற்றின் தோற்றம் மற்றும் பரவல் தொடர்பாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்” என, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகளும் வலியுறுத்தியுள்ள நிலையில், சீன அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.