இந்தியாவைப் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரஎன்று மோடி தலைமையிலான அரசு 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் குறித்து மக்கள் நடுவே நம்பிக்கையின்மை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதை மேலும் ஊக்குவிக்கும் முகமாக அமைந்திருக்கிறது, இந்தியச் சந்தையில் அன்னிய முதலீடுகள் வெளியேறியது. 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவித்தது நடுவண் பாஜக அரசு. இரண்டு மாதங்களாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில்- இந்தியாவின் தொழில், வணிகம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியன மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்தியாவைப் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரஎன்று மோடி தலைமையிலான அரசு 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் குறித்து மக்கள் நடுவே நம்பிக்கையின்மை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்புக்குப் பின்- இந்தத் திட்டம் மூலம் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை இல்லாமல், இந்தியப் பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இது பங்குச்சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவண் பாஜக அரசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளது 29,சித்திரை (மே12) நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சி என பல்வேறு துறை சார்ந்த திட்டங்களைப் பல கட்டங்களாக அறிவித்தார். இந்த அறிவிப்புகளை ஓன்றிணைத்து பார்த்தால் கிட்டதட்ட ஒரு இடைக்கால வரவு-செலவு அறிக்கை என்று கூறினால் மறுக்க முடியாது. முதலீட்டாளர்கள் நிர்மலா சீதாராமன் தலைமையிலான நடுவண் நிதியமைச்சகம் பல ஆய்வுகளைச் செய்து அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காத காரணத்தால் நாளது 29,சித்திரை (மே12)க்குப் பின் சுமார் 9600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து இந்திய சந்தையில் வெளியேற்றியுள்ளனர். நாளது 29,சித்திரை (மே12)தொடங்கி 5 நாட்கள் படிப்படியாகப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இந்த 5 நாட்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் நம்பிக்கையும் (silver bullets) காணப்படவில்லை எனக் குளோபல் முதலீட்டு வங்கியான நோமுரா அறிவித்துள்ளது. நடுவண் அரசு தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறுகிய கால வளர்ச்சி திட்டங்களாக இல்லை. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் மேசமான நிலையைச் சந்திக்கும். இந்தியாவின் ஜிடிபி 5 விழுக்காடு வரையில் குறையும் என்று அமெரிக்க முதலீட்டுச் சந்தை நிறுவனமான கோல்டுமேன் சாச்சீஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களில் இந்திய சந்தையில் இருந்து அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 9600 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர். இதில் 90 விழுக்காடு 29,சித்திரை (மே12) அறிவிப்புக்குப் பின்பு நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



