Show all

நிருவாகக் குளறுபடி! 26 ஆண்டுகளில் முதன்முறையாக 120 கோடி நட்டத்தை சந்தித்த ஐசிஐசிஐ வங்கி

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐசிஐசிஐ வங்கி தொடங்கப்பட்ட 26 ஆண்டுகளில் முதன்முறையாக நட்டத்தை சந்தித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 120 கோடி ரூபாய் இழப்பை ஐசிஐசிஐ வங்கி சந்தித்துள்ளது.

அதேசமயம், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,059 கோடி ரூபாய் லாபத்தை இவ்வங்கி ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதியாண்டு முடிவுகள் தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐசிஐசிஐ வங்கியின் முந்தைய வாராக் கடன்களுடன், புதிய வாராக்கடன்களும் சேர்ந்ததால் நிகர வாராக்கடன் சுமார் 5,971 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 120 கோடி ரூபாய் இழப்பை ஐசிஐசிஐ வங்கி சந்தித்துள்ளது.

நிர்வாகக் குளறுபடி புகாரில் ஐசிஐசிஐ வங்கி சிக்கியுள்ள நிலையில், வாராக்கடன் அதிகரிப்பு அந்த வங்கிக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில்,  நிர்வாகக் குளறுபடி தொடர்பாக இந்திய அரசும், அமெரிக்க அரசும் ஐசிஐசிஐ வங்கிக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், முதன்முறையாக அந்த வங்கி நட்டத்தை சந்தித்துள்ளது. 

நிருவாகக் குளறுபடி என்பது முழுக்க முழுக்க முன்னால் நிருவாகத் தலைவர், ஒரேயொரு கார்ப்பரேட் நிறுவனம் சார்ந்ததுதானாம்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,862.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.