Show all

தனுசும் வருங்கால முதல்வராம்! தமிழ்மக்கள் கடைக்கண் பார்வை பட்டு விட்டால் போட்டியாளர் யாராகினும் முதல்வர் பதவி அவருக்கு சிறு கடுகுதான்

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் தனுஷ் இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து,  திரைப்பட கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'தமிழக முதல்வரே' என தனுசை அழைத்து அவரின் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த சுவரொட்டியில் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினியின் புகைப்படங்கள் சிறியதாக அச்சடிக்கப்பட்டுள்ளன.

நடிகரும், தனுசின் மாமனாருமான ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அதிமுகவில் இணைந்து அதிமுகவைக் கைப்பற்ற இருக்கிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்க, தமிழக முதல்வரே என தனுசின் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

'தமிழக முதல்வரே' என பல ஆண்டுகளாக அரசியல் கட்சியினை சேர்ந்த தொண்டர்களும்,  விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் ரசிகர்களும் சுவரொட்;டி அடித்து ஒட்டி வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் தனுசும் களத்தில் இறங்கியுள்ளார். தமிழ்மக்களின் கடைக்கண் பார்வை பட்டு விட்டால் போட்டியாளர் யாராகினும் முதல்வர் பதவி அவருக்கு சிறு கடுகுதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,862.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.