Show all

சுவிட்சர்லாந்து மாநாட்டில், குற்றச்சாட்டு! இந்தியாவில் மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி ஒரு ஹிந்து தேசியவாத அரசை உருவாக்க முயற்சிக்கிறார்.

உலகின் நடுநிலை மற்றும் தலைசிறந்த நாடாக அறிப்படும் சுவிட்சர்லாந்து நாட்டின் மாநாட்டில், மோடியின் மீது குற்றச்சாட்டா? இனிமேலாவது, இந்தியாவில் மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசு- மதவாதத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று இந்தியாவின் மீது ஆர்வமுள்ள நடுநிலையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: புகழ்மிக்க உலகப்பணக்காரர் ஜார்ஜ் சொரெஸ், உலகின் தலைசிறந்த நாடாக அறிப்படும் சுவிட்சர்லாந்து நாட்டின், டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உலக, அரசியல் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து பேசினார்.

அவர் பேசும் போது, இந்தியாவில் மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி ஒரு ஹிந்து தேசியவாத அரசை உருவாக்க முயற்சிக்கிறார். தன்னாட்சி முஸ்லிம் பகுதியான காஷ்மீர் மீது தண்டனை நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். கோடிகணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க அச்சுறுத்துகிறார் என்று குற்றம் சுமத்திப் பேசினார். 

அமெரிக்காவில் குடிஅரசுத்தலைவர் டிரம்ப் உலகம் தன்னைச் சுற்ற வேண்டும் என்று விரும்பும் இறுதி நாசீசவாதி. குடிஅரசுத்தலைவர் ஆகும் அவரது கற்பனை உண்மையாகிவிட்டபோது, அவரது நாசீசம் ஒரு நோயியல் பரிமாணத்தை உருவாக்கியது. உண்மையில், அவர் அரசியலமைப்பினால் குடிஅரசுத்தலைவர் பதவிக்கு விதிக்கப்பட்ட வரம்புகளை மீறியுள்ளார், அதற்காக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது சரி எனக் கூறினார்.

உலகின் நடுநிலை மற்றும் தலைசிறந்த நாடாக அறிப்படும் சுவிட்சர்லாந்து நாட்டின் மாநாட்டில், மோடியின் மீது குற்றச்சாட்டா? இனிமேலாவது, இந்தியாவில் மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசு- மதவாதத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று இந்தியாவின் மீது ஆர்வமுள்ள நடுநிலையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.