கொரோனா நுண்ணுயிரித் தாக்குதல் ஏற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் எட்டு படுக்கைகள் கொண்ட தனியறை தயார் நிலையில் இருப்பதாக நலங்குத்துறை (ஹெல்த்) அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் வுகான் மாநிலத்தில் கொரோனா நுண்ணுயிரி பரவத் தொடங்கியது. இந்த நோய்த் தாக்குதலில். சீனாவில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா நுண்ணுயிரி பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை கொரோனா நுண்ணுயிரியால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனோ நுண்ணுயிரித் தாக்குதலை எதிர்கொள்வதற்காக சோதனை மையம், தனி சிகிச்சைப்பகுதி தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை தலைவி ஜெயந்தி தெரிவித்துள்ளார். கொரோனா நுண்ணுயிரி பற்றிய தகவல் கிடைத்ததும், சீனாவிலிருந்து வரும் பயணிகளைச் சோதித்து தமிழகத்திற்குள் அனுப்புவது என அரசு முடிவுசெய்தது. தற்போது விமானம் மற்றும் தொடர்வண்டி நிலையங்களில் முதல்கட்ட பரிசோதனை மையங்கள் இயங்குகின்றன. ஒருவேளை, நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், உடனடி சிகிச்சை தரவேண்டும் என்பதற்காக மருத்துவர்களுக்கு அன்றாடம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. பிற நுண்ணுயிரி காய்ச்சல் போலவே தும்மல் மூலமாகவும், சளி மூலமாகவும் கொரோனா நுண்ணுயிரி பரவும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவது எளிது என்பதால், அவர்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப் படுகின்றார்கள்.
கொரோனா நுண்ணுயிரித் தாக்குதல் ஏற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் எட்டு படுக்கைகள் கொண்ட தனியறை தயார் நிலையில் இருப்பதாக நலங்குத்துறை (ஹெல்த்) அதிகாரிகள் கூறினார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



