பாகிஸ்தானின் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளது. பல வீடுகளும் சேதமடைந்துள்ளன. 09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பாகிஸ்தானின் உள்ள கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 30 பேர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. எனவே பல வீடுகளும் சேதமடைந்துள்ளன. பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். விபத்து குறித்த தகவல் வந்தவுடன் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பாகிஸ்தான் அரசு இதுவரை வழங்கவில்லை. பாகிஸ்தானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கியிருந்தது. சர்வதேச விமான விபத்துக்களை கண்காணிக்கும் விமான விபத்து பதிவு அலுவலகத் தகவல்படி, பாகிஸ்தானில் இதுவரை 80க்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் நடந்துள்ளன என்றும், அதில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



