Show all

ஆனிமாதக் கோடையில் அங்கே கொரோனா காணாமல் போகுமா! குளிரை எதிர் கொண்டிருக்கும் நாடுகள் கொரோனா தாக்கத்தையும் கூடுதலாக எதிர்கொள்வதால்

இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நேற்று கொரோனா உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன. குளிர் காரணமாக இருப்பதாலா! அடுத்து வரும் ஆனிமாதக் கோடையில் கொரோனா தாக்கம் குறையுமா?

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை 8,59,295 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் பார்த்தால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நேற்று உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன. 

உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் 12,428 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் 1,05,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் இத்தாலியில் 837 பேர் உயிரிழந்துள்ளனர். 

இரண்டாவதாக அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் 748 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 4,053 பேர் இறந்துள்ளனர். அங்கு நேற்று மட்டும் 24,742 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 1,88,530 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

பிரான்சில் 499 பேர் பலி அதிக இறப்பில் 3வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 748 பேர் உயிரிழந்துள்ளனர், ஒட்டுமொத்தமாக 8,464 பேர் உயிரிழந்துள்ளனர். 95,923 பேர் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் புதிதாக 7,967 பேர் பாதிக்கப்பட்ட்டனர். பிரான்சில் நேற்று ஒரேநாளில் 499 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3,523 ஆக அதிகரித்தது. பிரான்சில் கொரோனா தொற்றால் 52,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 7,578 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர். 

இங்கிலாந்தில் நேற்று ஒரேநாளில் 381 பேர் இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் 3,009 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,150 ஆக உயர்ந்துள்ளது. 

பெல்ஜியத்தில் நேற்று மட்டும் 192 பேர் உயிரிழந்ததால், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 845 பேர் பாதிக்கப்பட்டதால் 12,595 ஆக அதிகரித்துள்ளது. 

நெதர்லாந்தில் நேற்று மட்டும் 176 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 1,039 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 845 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12,595 ஆக உயர்ந்துள்ளது. 

ஈரானில் நேற்று 141 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 2,898 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் நேற்று 310 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை மொத்தமாக 44,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜெர்மனியில் நேற்று 130 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 775 ஆக அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் 4.923 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஜெர்மனியில் மொத்தமாக 71,808 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகள் அனைத்துமே தற்போது மிகுந்த குளிர் நிலவும் பகுதிகள் ஆகும். மேற்கண்ட நாடுகள் எல்லாமே 15 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான வெப்ப நிலை உள்ள நாடுகள் ஆகும். ஆனி மாதத்திற்குப்பிறகு இந்தப் பகுதிகள் கோடையை சந்திக்கும் போது பனி விலகுவது போல கொரானாவும் விலகும் என்பதான நம்பிக்கை துளர்க்கிறது.

அதேநேரம் வெயில் அதிகம் உள்ள நாடுகள் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதும் உண்மை. ஆம் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரக்க நாடுகளில் உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை. குளிர் பிரதேச நாடுகளை ஒப்பிடும் போது பாதிப்பும் பெரிதாக இல்லை. என்கிற நிலையில் இந்தப் பகுதிகளில் கோடை இன்னும் மிகுந்து வருகிற நிலையில் வைகாசி மாதம் முடிவதற்குள் இங்கேயும் கொரோனா காணமல் போகலாம் என்றும் நம்பிக்கை துளிர்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.