நாளை முதல் குடும்ப அட்டைப்பொருள் வழங்கல் கடைகளில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது. 19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் குடும்ப அட்டைப்பொருள் வழங்கல் கடைகளில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் குடும்ப அட்டைப்பொருள் வழங்கல் கடைகளுடன் சுய உதவிக்குழுக்கள், இதர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் குடும்ப அட்டைப்பொருள் வழங்கல் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



