Show all

‘ஹிந்தி படித்தால் நமக்கு வேலை’ மாயையை கலைத்தது கொரோனா புள்ளிவிவரம்! நாடு முழுக்க கூலிகளாக குவிந்திருக்கும் ஹிந்தி மட்டும் தெரிந்தவர்கள்

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து கடந்த 73 ஆண்டுகளாக ஹிந்தி படித்தால் அனைத்து மாநிலத்தவருக்கும் வேலை கிடைக்கும் போல, ஹிந்தியைத் திணித்து, பீற்றி வந்திருந்தது நேற்றைய காங்கிரசும், ஹிந்தியோடு ஹிந்துத்துவாவையும் திணித்து, பீற்றி வந்து கொண்டிருக்கிறது நடப்பு பாஜகவும். உண்மை நிலையோ வேறு என்று கொரோனா புள்ளிவிவரப் படுத்தியிருக்கிறது. 

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து கடந்த 73 ஆண்டுகளாக ஹிந்தி படித்தால் அனைத்து மாநிலத்தவருக்கும் வேலை கிடைக்கும் போல, ஹிந்தியைத் திணித்து, பீற்றி வந்திருந்தது நேற்றைய காங்கிரசும், ஹிந்தியோடு ஹிந்துத்துவாவையும் திணித்து, பீற்றி வந்து கொண்டிருக்கிறது நடப்பு பாஜகவும். ஆனால் உண்மையில் ஹிந்தி மட்டுமே தெரிந்தவர்களாகவும், வறுமையிலிருந்து மீட்கப்படாதவர்களாகவும், கல்வி அறிவில்லாதவர்களாகவும் வடஇந்திய மக்கள் கூட்டம் கூட்டமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உடல் உழைப்புக் கூலிகளாக அலைந்து வந்திருக்கிறார்கள் என்பதை கொரோனா நமக்கு புள்ளிவிவரமாக வழங்கியிருக்கிறது. அது இந்தியா முழுவதும் கொரோன பரவலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கில் வட இந்திய மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதிலிருந்து தெரிய வருகிறது. 

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் வரும் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உடல் உழைப்பு வேலைக்காக இந்தியா முழுவதும் பரவியுள்ள, கல்வித்தகுதி ஏதுமில்லாத ஹிந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகள் மட்டுமே பேசத் தெரிந்த வடஇந்திய தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர்.

கேரள மாநிலத்திலும் இந்த வகை வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். முகாம்கள் அமைத்து அவர்கள் தங்க வைக்கப்படுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் 1,059 சமுதாய சமயலறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோட்டயம் மாவட்டம் பாயிப்பாடு பகுதியில் முந்தாநாள் வெளிமாநிலத் தொழிலாளர்கள் திடீரென சாலையில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

அவர்களுக்கு அவர்கள் சாப்பிடும் வகையான உணவு வழங்கவில்லை என்பதாக. எங்கள் ஊருக்கு எங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறி அவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பெரும்பாவூர் பகுதியிலும், வேறு சில இடங்களிலும் வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது கேரள அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியது.

வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதற்காக பஸ் ஏற்பாடு செய்யப்படுள்ளதாகச் சிலர் பொய்யான தகவலைப் பரப்பியதே இந்தப் போராட்டத்துக்குக் காரணம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

இந்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளம் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் முன்னேறுவது பிடிக்காத சிலர், தொழிலாளர்களைத் தூண்டிவிட்டுள்ளனர். அவர்களுக்கான கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, பருப்பு என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.