Show all

அயல்கோளில் இருந்து புவிக்கு வந்த தகவல்! அனுப்பியவர்களின் மொழி, வடிவம் குறித்து அரைகுறையான ஆய்வு

அயல்கோளிலும் உயிரிகள் இருக்க முடியும் என்பதை உறுதியாக நம்ப முடியும். அந்த அடிப்படையில் ஏலியன்கள் என்ற ஒரு அயல்கோள் உயிரின வடிவம் ஒரு பெருங்குழுவினரால் நீண்ட காலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. சிறு சிறு குழுக்களாக அயல்கோள் மனிதர்கள் குறித்து புழங்கும் செய்திகளும் நிறைய உண்டு.

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வேற்று கோள்களின் நுண்ணறிவுகளை தேடும் திட்ட அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த அமைப்பின் திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ், பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கோளைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளதாக ஒரு புதிய தகவலைத் தெரிவித்து உலகம் முழுவதும் ஒரு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தாம், வேற்றுக் கோள் உயிரினங்கள் அனுப்பிய தகவல்களை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், தகவல்கள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து கிடைத்துள்ள சமிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புவியில் புழங்கும் பழமையான மொழிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அதிகார மொழிகளாக இருக்கின்ற சில மொழிகளோடு பொருத்திப் பார்த்து அயல்கோள் உயிரிகளின் மொழிகளை கண்டறிய முயலும் ஆய்வு உரிய பலனின்றி தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருக்கும் என்றே கருத முடிகிறது. 

இன்னொரு வகையாக சொல்ல வேண்டுமானல் உலகம் முழுவதும் அயல் கோள் மனிதர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் பல்வேறு இன மக்களிடம் கொண்டாடப் பட்டு வருகிறது. ஏலியன்கள் என்றவொரு வடிவமைப்பு பெருங்குழுவினரால் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. இவை அனைத்தையும் ஒரே தளத்தில் தொகுக்க முயலாமல், அயல்கோள் உயிரிகளின் வடிவத்தைக் கண்டறிய முயலும் ஆய்வு உரிய பலனின்றி தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருக்கும் என்றே கருத முடிகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,192.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.