ராட்சசி மற்றும் அடுத்த சாட்டை இரண்டு படங்களும் ஒரே கதையம்சம் கொண்டிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அடுத்த சாட்டை படம் முற்றிலும் வேறு மாதிரியான களம் என்று சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் அன்பழகன். 07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகை ஜோதிகா நடித்துக் கொண்டிருக்கும் படம் ராட்சசி. ஒரு அரசு பள்ளியில் நடக்கும் அராஜகங்கள், அதனை எதிர்த்து போராடும் ஆசிரியையின் கதையாக ராட்சசி உருவாகியிருக்கிறது. இயக்குநர் அன்பழகன் சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தை இயக்கியவர். அவர் தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற பெயரில் புதிய படம் இயக்குகிறார். இந்த நிலையில் ‘ராட்சசி’ மற்றும் ‘அடுத்த சாட்டை’ இரண்டு படங்களும் ஒரே கதையம்சம் கொண்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் எம்.அன்பழகன் கூறும்போது, அரசுப் பள்ளியை மையமாக வைத்து ஆயிரம் படம் எடுக்கலாம், அவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன. எனது சாட்டை படத்தில் சொல்லாத சில விசயங்களை ‘ராட்சசி’ படத்தில் எடுத்திருக்கலாம். ஆனால் ‘சாட்டை 2’ படம் முற்றிலும் வேறு மாதிரியான களம் என்றும், ராட்சசி மற்றும் அடுத்த சாட்டை இரண்டு படங்களும் ஒரே கதையம்சம் கொண்டிருப்பதாக சொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,191.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.