Show all

தொடர்வண்டித்துறையிலும் ஏமாளிகளை அறுவடை செய்யும் முயற்சியில் மோடி அரசு! எரிவாயுமானியத்தில் முன்னெடுத்தது போல

மோடி ஆட்சிக்கு வந்தாலே எதைப் பிடுங்கலாம்? ஏப்படி பிடுங்கலாம்? என்பதிலே குறியாக இருப்பார் என்பது உலகறிந்தது; ஆனால் வடஇந்திய மக்களுக்குப் புரியாதது. தொடர்வண்டிப் பயணிகளின் மானியத்தை பிடுங்க வருகிறது திட்டம்.

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் பாஜக ஆட்சியில் முதல் 100 நாட்களுக்கு செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் குறித்த அறிக்கையை தொடர்வண்டித் துறை நடுவண் அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அதில் சமையல் எரிவாயு உருளை மானியத்தை பயனாளிகளிடம் இருந்து பிடுங்கிய திட்டத்தை போல தொடர்வண்டித் துறையிலும் செயல்படுத்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்வண்டி பயணிகளுக்கு ஆகும் செலவில் 53 விழுக்காடு மட்டுமே அவர்களிடம் இருந்து பெறப்படுகிறது. மீதமுள்ள 47 விழுக்காடு மானியமாக வழங்கப்படுகிறது. 

இதனால் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டு கொடுப்பது போல் தொடர்வண்டியிலும் மானியத்தை விட்டுக் கொடுப்பதற்கான ஒரு திட்டத்தை பரிந்துரை செய்யப்பட்டு அது நடைமுறைக்கும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த முறை நடுவண் அரசில் ஆட்சியை பிடித்த போது மோடி கேட்டு கொண்டதற்கிணங்க 1.25 கோடிக்கு மேலான மக்கள் தங்கள் மானியத்தை விட்டுக் கொடுத்ததாக தகவல் சொல்லப்பட்டு வருகிறது. அது போல் ஒரு வெற்றியை தொடர்வண்டித் துறையிலும் மக்கள் வாரி வழங்க வேண்டும் என நடுவண் அரசு விரும்புகிறது.

ஆனால் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்தவர்களில் பெரும் பகுதியினர், செயலியை பயன்படுத்தத் தெரியாமலும், தெலைப்பேசி அழைப்பில் மானியத்தை விட்டுக் கொடுப்பதற்கு வைக்கப்பட்ட சூட்;சமத்ததை புரிந்து கொள்ளாமல் தவறுதலாக எண்ணை அழுத்தி விட்டுக் கொடுத்தவர்களுமே அதிகம். 

அதுபோன்ற ஏமாளிகளை தொடர்வண்டித் துறையிலும் அறுவடை செய்யும் முயற்சியை, மீண்டும் நடுவண் அரசில் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு முன்னெடுக்கிறது. வாழ்க ஏமாளிகள்! தொடர்ந்து வெல்க பாஜக.   

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,192.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.