Show all

ஊழல் குறைவாக உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 86வது இடத்தில் உள்ளதாம்!

இந்தியா- கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டை விட, கடந்த ஆண்டில் ஆறு இடங்கள் பின்தங்கி 86வது இடத்திற்கு சென்றுள்ளதாம்.

16,தை,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த ஆண்டில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 86வது இடத்தில் உள்ளது.

பன்னாட்டுக் கண்காணிப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், என்ற அமைப்பு ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 180 நாடுகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டை விட, கடந்த ஆண்டில் ஆறு இடங்கள் பின்தங்கி 86வது இடத்திற்கு சென்றுள்ளது. பொதுத்துறையில் நிலவும் ஊழலின் அளவைக் கொண்டு 0 முதல் 100 வரையிலான மதிப்பெண்களுடன் ஊழலை வகைப்படுத்தியுள்ளனர். அதாவது, அதிக மதிப்பெண் உள்ள நாடுகள் ஊழல் குறைந்ததாகவும், குறைவான மதிப்பெண்கள் கொண்ட நாடு ஊழல் அதிகமானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில், 40 மதிப்பெண்களுடன் இந்தியா 86வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 80வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

88 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. சோமாலியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய இரண்டு நாடுகளும் வெறும் 12 மதிப்பெண்களுடன் பட்டியலில் 179வது இடத்தை பிடித்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.